நாடு முழுவதும் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து வெள்ளியன்று (ஆக.23) ஏழு கிணறு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு ஆகிய அமைப்புகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்வர் சாதிக் (வாலிபர் சங்கம்) தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் ஜெ.பார்த்திபன், செயற்குழு உறுப்பினர் லோ.விக்னேஷ் மற்றும் எம்.ஜலாலுதீன் (சிபிஎம்), ஆர்.குமார் (சிஐடியு), மகேஸ்வரி, தேவி சங்கர் (மாதர் சங்கம்), எஸ்.விக்னேஷ் (மாணவர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.