திருவள்ளூர், ஆக 29- விற்பனை குழு (வெண்டிங் கமிட்டி) தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (ஆக 29), கும்மிடிப் பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி, பேரூராட்சிகளில் வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக மாநிலம் முழுவதும் நடத்த வேண்டும், சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் முறைப் படுத்துதல் சட்டம் 2014-இன் படி சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். அனைவருக்கும் இலவச தள்ளு வண்டி வழங்க வேண்டும், அடையாள அட்டை கொடுக்காமல் விடுபட்டவர்களை கணக் கெடுத்து முறையாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட சாலையோர வியாபாரி கள் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் இந்த போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் வட்டத் தலைவர் வி.ஜோசப் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் டி.கோபாலகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் வி.குப்பன், துணை தலைவர் மேரிடேவின், சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜி.சூரியபிரகாஷ், கட்டுமான சங்கத்தின் மாவட்ட நிர்வாகி எம்.சி.சீனு, உட்பட பலர் பேசினர்.