திருவள்ளூர், ஏப். 6- குழந்தைகளின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு ஒன்றிய பாஜக -வை அகற்ற வேண்டும் என திரு வள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். சனிக்கிழமையன்று (ஏப் 6) சின்னம்பேடு, ஆரணி, கொசவன் பேட்டை, பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை, வாழவந்தான் கோட்டை, சீத்தஞ்சேரி, எல்லாபுரம் ஒன்றியம் முழுவதும் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் பணிநடைபெற்றது. திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, தலை மையில் நடைபெற்ற பிரச்சாரத்தில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், திமுக நிர்வாகி கள் சி.எச்.சேகர், கன்னிகை.ஸ்டாலின்,சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.ரவி (ஒன்றிய கவுன்சிலர்), இ.தவமணி, ஜி.சூரியபிரகாஷ், எஸ்.இ.சேகர், ஏ.பத்மா, த.கன்னியப்பன், சிபிஎம் தலைவர் கே.செல்வராஜ், விசிக மாவட்ட செயலாளர் நீலமேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரச்சாரத்தில் வேட்பாளர் சசி காந்த் செந்தில் பேசுகையில், சமுக நீதி அடிப்படையில் தான் மாவட்ட ஆட்சியராகும் வாய்ப்பு கிடைத்தது.10 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியராக பணியாற்றி இருக்கிறேன். உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது பாஜக அரசின் தாக்குதல்கள் ஏராளம். பாஜக - ஆர்எஸ்எஸ் ஆட்சியை மத்தியில் இருந்து அகற்றப்பட வில்லை என்றால் கூடிய சீக்கிரத்தில் பல பிரச்சனைகள் வரும். குறிப்பாக நம் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கப்படும். இதற்கான பாஜக ஆட்சியை அகற்ற, ஒன்றி ணைந்து போராட வேண்டும். ஆகவே சொந்த, பந்தங்கள், நண்பர்கள் என அனைவரும் திரு வள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.