districts

img

தொழிலாளி மர்ம மரணம் : விசாரணை நடத்த சிபிஎம் கோரிக்கை

திருவண்ணாமலை,டிச.6- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஏரிக்கு அடியில் கட்டிய நிலையில் சடலமாக கண்டெ டுக்கப்பட்ட தொழிலாளி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தேசூரை அடுத்த கெங்கம்பூண்டி லட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் கன்னி யப்பன் ( 43). பழங்குடியின பிரிவை சேர்ந்த  இவர் கடந்த 3 ஆம்  தேதி ஏரி யில் மீன்பிடிக்க செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார்.  பின்னர் அவர் மறுநாள் காலைவரை வீடுதிரும்பவில்லை. அவரது மனைவி தேவி ஏரி மற்றும் பக்கத்தில் உள்ள காடுகளில் சென்று தேடிப்பார்த்தார். அப்போது ஏரியில் அவரது டார்ச் லைட் மற்றும் துணி இருந்தது. இதுகுறித்து தேசூர் காவல் நிலையத்தில்  புகார் செய்தார்.  காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று  தமிழ்நாடு மாநில மலைவாழ் மக்கள் பொதுச்செயலாளர் இரா. சரவணன், மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அப்துல்காதர் தலைமையில் தேசூர் காவல் நிலையம்  முன்பு வந்தவாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, தேசூர் காவல்துறையினர் தீயணைப்பு படையினருடன்  ஏரியில் இறங்கி கன்னியப்பனை தேடினர். திருவண்ணாமலையிலிருந்து துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் சென்று கரையோரமாகவே சுற்றி சுற்றி வந்தது. அதனால் சரவணன் ஏரிக்குள்தான் இருக்க வேண்டும் என்று தேடினர். அப்போது, கன்னியப்பன் கட்டியிருந்த லுங்கியை கிழித்து ஏரியில் உள்ள முள் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டுப்பி டித்தர். பிறகு, அவரது உடலை தீய ணைப்பு படையினரும், காவல்துறை யினரும் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வு க்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, வந்தவாசி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா, பயிற்சி துணை காவல் கண்கா ணிப்பாளர் கீர்த்திவர்மன் ஆகியோர் மேற்பார்வையில், தேசூர் காவல் ஆய்வாளர் கோமளவள்ளி, உதவி ஆய்வாளர் சுந்தரம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் கன்னியப்பனை மின்வேலியில் சிக்க வைத்து  கொலை செய்ததாகவும், அந்த நபர்களை கண்டுப்பிடித்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

;