districts

img

குடிநீரில் சாக்கடை கலப்பு: நகராட்சி ஆணையரிடம் சிபிஎம் மனு

சிதம்பரம், டிச.17- சிதம்பரம் நகராட்சியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை உடனே தடுக்ககோரி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி மாவட்டக்குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது. சிபிஎம் மாநில குழு உறுப்பினர் மூசா தலை மையில் கிளை செயலாளர் அப்துல் ஹலீம், நகர் குழு உறுப்பினர் ஜின்னா, அஷ்ரப் அலி உள்ளிட்டவர்கள் சிதம்பரம் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வினை நேரடியாக சந்தித்து அளித்த மனு விவரம் வருமாறு, சிதம்பரம் நகராட்சி 5ஆவது வார்டு  பகுதியில் புதிய பாதாள சாக்கடை கட்டு வதற்கு  30அடி ஆழம் தோண்டப்பட்டது.  இதன் காரணமாக குடிநீர் இணைப்பு குழாய் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு பல துண்டுகளாக இணைப்பு கொடுக்கப்பட்டது.  இதனால் குடிநீர் குழாய்களில் சாக்கடை நீர் கலந்து வீட்டிற்கு வருகிறது. இதுகுறித்து  பொதுமக்கள் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், நகராட்சி முன்பு போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை. கடந்த 3 ஆண்டு காலமாக   குடிநீர் கிடைக்கப்பெறாமல் தெரு மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு  உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு  செய்ய வேண்டும் என அந்த மனுவில்  குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட  நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

;