districts

img

கண்ணீர் சிந்தும் காரைக்கால் பருத்தி விவசாயிகள் பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜூலை 4-

    காரைக்கால் பருத்தி விவ சாயிகளை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், டெல்டா பகுதியுடன் இணைந்த காவிரி கடை மடை  பகுதி யாகும். பிரதான தொழில் விவசாய மாகும். ஆண்டுக்கு முப்போகம் விளையும் பகுதி. ஒன்றிய, மாநில அரசுகள் கொள்முதல் செய்வதில்லை. ஆனால், ஆட்சியாளர்கள் மீது கடும் எதிர்ப்பு உருவானது.

   நெல் மூட்டைகள் ஒன்றிய பாஜக அரசு கொள்முதல் செய்ய ஒத்து ழைக்காத நிலையில், முந்தைய மாநில அரசு நிலைமைகளைச் சமாளிக்க  ஆண்டுக்கு ஒரு போகம் உற்பத்தி செய்யும் பருத்தி விவசாயம் ஊக்குவித்தது. மூன்று போகம் நெல் விளைந்த பூமியில் படிப்படியாக பருத்தி விவசாயத்தை நோக்கி விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு  1,200 ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி பயிரி டப்பட்டது. 2023 ஆம் ஆண்டு 4,500 ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டன. 2022- இல் ஒரு கிலோ பஞ்சு ரூ. 120க்கு கொள்முதல் செய்தனர்.

     2023 ஆம் ஆண்டில் ஒரு கிலோ பஞ்சு ரூ. 45க்குஅடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யப்படு கிறது. அதாவது, கடந்த ஆண்டு 100 கிலோ பருத்தி மூட்டை ரூ.12,000 விற்றது  நடப்பாண்டில் 100 கிலோ பருத்தி மூட்டை வெறும் ரூ. 4,500க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

   ஒரு முதலாளி தான் உற்பத்தி செய்கின்ற பொருளுக்கு விலை தீர்மானிக்க முடிகிறது ஆனால் விவ சாயி தான் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கான  விலையை தீர்மானிக்க முடியவில்லை.

    பெரும் வணிகர்கள், கார்ப்ப ரேட்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தை விவசாயிகளின் விளைப்பொருள்களுக்கு விலையை  தீர்மானிக்கிறது . இதனால் விவசாயிகள் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள். இந்நிலை மாற வேண்டியது காலத்தின் கட்டாய மாகும்.

     பருத்தி விவசாயிகள்  செம்பேன், வெள்ளை பூச்சி, மாவு பூச்சி  நோய் பாதிப்புகளில் இருந்து பருத்தி விவ சாயத்தை பாதுகாக்க பெருமளவு பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. உரிய காலத்தில் கடனை பெற்றாவது தடுப்பு நடவடிக்கை செய்யத் தவறினால் ஒட்டுமொத்த பருத்தி விவசாயம் அழிந்துவிடும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளனர் .

   மேலும் வழக்கத்துக்கு மாறாக தற்போது பெய்து வரும் கோடை மழையால் பருத்தி விவசாய  நோய் தொற்று ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. ஆகவே, மாநில அரசு பருத்தி விவசாயிகள் வாழ வைக்க ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம், பயிர் காப்பீடு நிறுவனத்திடமிருந்து காப்பீட்டுத் தொகை ரூ. 30,000 பெற்று தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    மேலும் புதுச்சேரி மாநில அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளபடி மாநில விவசாயிகள் பயிரிடுவதற்கு கொடுத்த  கடன்களை ரத்து செய்ய  வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரி வித்திருக்கிறார்.