districts

img

விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா படத் திறப்பு நிகழ்ச்சி

ராணிப்பேட்டை, நவ. 27- விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவர், தகை சால் தமிழர், தோழர் என். சங்கரய்யாவுக்கு  புகழஞ்சலி கூட்டம் ராணிப்பேட்டை பெல் அரங்க கிளை சார்பில் நடை பெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் அ. தவராஜ் தலைமை தாங்கினார்.  இதில் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி, ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் என். காசிநாதன், வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன், பெல் அரங்கக் கிளை செய லாளர் அ. கலைவாணன், ராணிப்பேட்டை நகர செயலாளர் ஜி. குணசேகரன், விசிக சேகர், தொழிற்சங்கம் சார்பில் காங்கிரஸ் தனசேகரன், திமுக பாண்டியன், அதிமுக சுந்தரராஜன், பாமக குமரவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர். இந்தக் கூட்டத்தில் சுதந்திரத்தை பாது காக்க போராடுகிறோம் தோழர். என்.எஸ் நேர்காணல் புத்தகத்தை அனைவருக்கும் வழங்கினர்.