சர்க்கஸ் ஊழியர் அடித்துக் கொலை
அம்பத்தூர், ஜன. 13- பூந்தமல்லியில் சர்க்கஸ் ஸ்டிக்கர் கேட்டு ஏற்பட்ட தகராறில் ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார். உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது அஸ்மத் (58). இவர் ஆவடியில் உள்ள தனியார் சர்க்கஸில் ஊழி யராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முகமது அஸ்மத் சர்க்கசில் இயங்கி வரும் ஆட்டோவை பழுது பார்க்க பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் உள்ள மெக்கானிக் கடைக்கு எடுத்து வந்தார். அப்போது அங்கு வந்த 2 ஓட்டுநர்கள் ஆட்டோவில் ஒட்டுவதற்கு சர்க்கஸ் விளம்பர ஸ்டிக்கரை கேட்டுள்ளனர். மேலும் அந்த ஸ்டிக்கரை ஆட்டோ வில் ஒட்டினால் சர்க்கஸிற்கு 4 பேர் இலவசமாக செல்ல லாம் என்று கூறப்படுகிறது. அதற்கு முகமது அஸ்மத் ஸ்டிக்கர் என்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திர மடைந்த இருவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கல் தலையில் குத்தியதில் முகமது அஸ்மத் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தி னர் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது அஸ்மத் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். புகாரின் பேரில் பூந்தமல்லி காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.
சென்னையிலிருந்து அயோத்திக்கு விமான சேவை துவக்கம்
சென்னை, ஜன.13- சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரூ.6,499 என்ற கட்டணத்தில் விமான சேவை முன்பதிவு தொடங்கியது. சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12:40-க்கு புறப்படும் விமானம் மாலை 3:15-க்கு சென்றடையும். அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6:20-க்கு சென்னை வந்து சேர உள்ளது. இதற்கான விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது. வரும் பிப்.1 முதல் சென்னை யில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. மேலும் சென்னையில் இருந்து லட்சத்தீவுக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கும் அடுத்த மாதம் முதல் கூடுதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கூலித் தொழிலாளி அடித்துக் கொலை
சென்னை, ஜன. 13- சென்னை பேசின்பாலத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப் பட்டார். புளியந்தோப்பு கே.பி.பூங்கா 12ஆவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் மு.பாஸ்கர் (45). கூலித் தொழி லாளியான இவர், கே.பி.பூங்கா முதலாவது பிளாக் பகுதியில் காலி இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தார். அப்போது ஏ பிளாக் பகுதியைச் சேர்ந்த சே.காட்டு ராஜா (40) மதுபோதையில் வந்துள்ளார். ராஜா, அங்கு நின்று கொண்டிருந்த பாஸ்கரிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே ராஜா, அங்கு கிடந்த உருட்டு கட்டையால் பாஸ்கரை தாக்கினார். இதில் தலை, முகம் பகுதியில் பலத்தக் காயமடைந்த பாஸ்கர் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பாஸ்கரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்து பேசின்பாலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, காட்டு ராஜாவை கைது செய்தனர்.
இளம் கலைஞர்களுக்கு விருது
காஞ்சிபுரம்,ஜன.13- காஞ்சிபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ் வரம், தவில், உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், சிலம் பாட்டம், நாடகக் கலை ஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் தெருக் கூத்து உள்ளிட்ட நாட்டுப் புறக் கலைகளை தொழி லாகக் கொண்டுள்ள கலை ஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் விவரங்களுக்கு தொலை பேசி எண்: 044-27269148 தொடர்பு கொள்ளவும்.
மினி மாரத்தான் போட்டி
கடலூர்,ஜன.13- 2023-ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளை யாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் வருகிற 19-ந் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சுமார் 5 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கிடையே கேலோ இந்தியா இளைஞர் விளை யாட்டு போட்டிகள் குறித்து மாவட்டத்தில் உள்ள பொது மக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறியும் வண்ணம், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை யில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி கடலூரில் நடை பெற்றது. இதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு மாரத்தான் ஓட்டப் போட்டியை தொடங்கி வைத்தார். கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய மாரத்தான் வெள்ளி கடற்கரை வரை சென்றது. இதில் காவல் கண்காணிப்பா ளர் ராஜாராம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ரூ.25 லட்சம் மோசடி: இருவர் கைது
கடலூர்,ஜன.14- கடலூர் மஞ்சக்குப்பம் கோழிகாரன் தெருவை சேர்ந்த வர் முகமது மீரான். அவர் யூடியூபில் ஒரு விளம்பரம் பார்த்துள்ளார். அதில் திண்டுக்கல் மாவட்டம், வத்தல குண்டுவை சேர்ந்த சூர்யா, அவரது சகோதரர் நாசிக்கை சேர்ந்த முகமது ரபிக் ஆகியோர் வெங்காயம் ஏற்றுமதி வியா பாரத்தில் நல்ல அனுபவம் உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த நபர்களை தொடர்பு கொண்ட முகமது மீரான், வெங்காயம் விலை குறைவாக இருக்கும் போது அதை கொள்முதல் செய்து குடோனில் குவித்து வைத்து, பிறகு, விற்பனை செய்ய வேண்டும். அப்போது கிடைக்கும் லாப தொகையுடன் 2 விழுக்காடு சேர்த்து கொடுப்போம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய முகமது மீரான், சூர்யாவின் பெயரில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கணக்கில் கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மொத்தம் ரூ.25 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர், ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.] இதுகுறித்து முகமது மீரான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலை மறைவாக இருந்து வந்த முகமது ரபீக்கை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த காவலர்கள் மஹா ராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு இதே போல மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை யில் தெரிய வந்தது
நூதன போராட்டம்
கடலூர்,ஜன.13- கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சி யில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் இதுவரை சாலை வசதி செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் செம்மண் சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இந்த மண் சாலை சேறும் சகதியுமாக மாறியது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தன. மேலும் மின்விளக்கு வசதி ஏதும் இல்லாததால் இரவு நேரத்தில் அப்பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவி சுபஸ்ரீ, மண் சாலையில் மண்டியிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.