districts

சென்னை விரைவு செய்திகள்

ரூ.10 கோடி பறிமுதல்

வேலூர், செப். 30- வேலூர் மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பள்ளி கொண்டா காவல் துறையி னர் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடு பட்டிருக்கும் போது, கோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு 4 பேர் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.  அவர்களிடம் காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் கட்டுக்கட்டாக இருந்த  10 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். 


அண்ணாசிலை அவமதிப்பு: வியாபாரிகள் கடையடைப்பு

விழுப்புரம், செப். 30- விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் புதுவை - விழுப்புரம் சாலையில் அண்ணாசிலை உள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு செருப்பு மாலை அணிவித்து அவ மதித்துள்ளனர். இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, விசிக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ட மங்கலம் காவல் துறை யினர் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த னர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்  கிழமையன்று (செப். 30) ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி கண்டமங்கலம் பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் கடையடைப்பு போராட்டத்தையொட்டி சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.