சென்னை, ஜூலை 1-
சென்னை மாதவரத்தில் இலவச புற்று நோய் பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜூலை 1) நடைபெற்றது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை சார்பில் இந்த முகாம் நடைபெற்றது.
முகாமை 28ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.கனிமொழி துவக்கி வைத்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் வி.ஆனந்தன், பகுதிச்செயலாளர் வி.கமலநாதன், ஏ.தமிழ்செல்வி, மைதிலி (மாதர் சங்கம்), மாஸ்கோ, உதயா (வாலிபர் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய், மார்பகம், வாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அதை தடுக்கும் வழிமுறைகளையும் மருத்துவர் பிரமிளா எடுத்துக் கூறினார். 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.