விழுப்புரம்,ஜன.12- தமிழ்நாட்டின் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளை யாட்டுப் போட்டிகள் நடை பெறுகிறது. இதையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் வகையில் விழுப்புரத்தில் மாரத்தான் போட்டி நடை பெற்றது. ஆட்சியர் சி.பழனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் கள் திரளாக பங்கேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் முயற்சியினால், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களி டம் உள்ள விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகை யில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவையில் நடைபெறு கிறது. இதையொட்டி நடந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கி, எல்லிஸ் சத்திரம் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரா. ஜெயக் குமாரி, விழுப்புரம் நகராட்சி ஆணையர் ரமேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.