கவின்கேர், மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் உடன் இணைந்து, 12வது சின்னிகிருஷ்ணன் புத்தாக்க கண்டுபிடிப்புக்கான விருது வழங்கும் விழாவை சென்னையின் ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடத்தியது. பொதுவெளியில் அதிகம் அறியப்படாமல், மனஉறுதியுடன், செயல்படும் திறன்மிக்க தொழில்முனைவோர்களை இந்த ஆண்டு அடையாளம் கண்டு, பலரும் அறியுமாறு செய்யும் நோக்கத்தோடு வழங்கப்படும் இந்த வருடாந்திர விருது நிகழ்வில் , மூன்று புதுமையான தொழில்முனைவோர்களை கண்டறிந்து அவர்களின் சாதனைகளை அங்கீகரித்து அவர்களை கவுரவித்தது. நெஸ்லே இந்தியா லிமிடெட் – ன் தலைவர் சுரேஷ் நாராயணன், கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே. ரங்கநாதன், மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோஸியேஷன் தலைவர். கே. மகாலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.