districts

img

அம்பேத்கர் விளையாட்டு திடலில் கழிவறை, குளியலறை திறப்பு

சென்னை, பிப்.3- சென்னை மாநகராட்சி 4ஆவது வார்டு எர்ணாவூரில் அம்பேத்கர் விளை யாட்டு திடல் உள்ளது. இங்கு ஏராள மான இளைஞர்கள் பல்வேறு வகை யான விளையாட்டுகள் விளையாடி வரு கின்றனர். ஆனால், அங்கு இதுவரை கழிப்பறை, குளியலறை இல்லாமல் இருந்தது. இதனால் விளையாட்டு வீரர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் எர்ணாவூர் இளைஞர்கள் சங்கம் மற்றும் விளையாட்டு வீரர்கள் இணைந்து தங்கள் சொந்த முயற்சியில் கழிப்பறை, குளியல் அறை, உடை மாற்றும் அறை ஆகியவற்றை கட்டி முடித்தனர். புதிய கட்டிடத்தை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் திறந்து வைத்தார். மேலும் அந்த விளையாட்டு திடலை சுற்றுசுற்றுச்சுவர் அமைத்து நடைபயிற்சிக்கான பாதை, உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் இளைஞர் சங்க தலைவர் கவி, சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் கே.வெங்கடையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.