சென்னை, ஜூலை 19-
சளி, இரும்பலுக்கான ‘போல்கோடின்’ மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத் துவதால் மாற்று மருந்து அவசியம் என்று ஒன்றிய அரசின் மருந்து கட்டுப் பாட்டுத்துறை தலைவர் மருத்துவர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி தெரிவித்திருக் கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
உலக சுகாதார அமைப்பு சார்பில் அண்மையில் மருந்து தொடர்பான வெளியிடப்பட்ட எச்சரிக்கை செய்தியில், சளிமற்றும் இருமலுக்காக பயன் படுத்தப்படும் ‘போல் கோடின்’ என்ற மருந்தை உட்கொண்டவர்களுக்கு, அதற்கு அடுத்த 12 மாதங்களில் மயக்கவியல் மருந்தை செலுத்தும்போது கடுமையான பக்க விளைவு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பல்வேறு மருந்து ஒழுங்குமுறை ஆணையங்கள் அந்த மருந்தை திரும்பப்பெற்றுள் ளன. இதுதொடர்பாக அண் மையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதித்து பல் வேறு முடிவுகள் எட்டப் பட்டன. அதன்படி மருத்து வர்கள் மற்றும் மருத்துவத் துறையினர், நோயாளி களிடம் ‘போல்கோடின்’ மருந்துக்கு மாற்றாக வேறு மருந்தை எடுத்துக் கொள்ளு மாறு பரிந்துரைக்க வேண்டும்.
நோயாளிகளும் அந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரையின்றி உட் கொள்ளுதல் கூடாது. அறு வைசிகிச்சை மேற்கொள் ளும் நோயாளிகள், ‘போல் கோடின்’மருந்தை கடந்த 12 மாதங்களுக்குள் எடுத் திருந்தால், அது தொடர்பாக மருத்துவர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.