கிருஷ்ணகிரி,செப்.18- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஒன்றியத்தில் உள்ள பள்ள பள்ளி ஊராட்சி கெம்ப பள்ளியில் மாற்று சமூகத்தை சேர்ந்த 120 குடும்பமும் தலித் வகுப்பை சேர்ந்த 30 குடும்பமாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பழமையான மாலகெரிகை கோவிலுக்கு சொந்த மான சர்வே எண் 518,519 இல் சுமார் 5.5 ஏக்கர் வானம் பார்த்த பூமி நிலத்தை மூன்று தலை முறையாக தலித் வகுப்பை சேர்ந்த 65 வயதாகும் சிக்கண்ணா குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர். இவரது சகோதரர், சகோதரிகள், மகன், மகள்,பேரப்பிள்ளைகள் என குடும்பத்தில் உள்ள 30 பேர் இந்த நிலத்தின் காட்டு வெள்ளாமை மூலம் கிடைக்கும் வருமானத்திலி ருந்து வாழ்க்கையை நகர்த்தி வரு கின்றனர். மேலும், கோவில் பராமரிப்பு, பூஜைகள் செய்வது, விழா எடுப்பது உள்ளிட்ட செலவினங்களையும் முறையாக செய்து வருகின்றனர். பழைய கோவிலுக்கு முன்பாக சிறியதாக புதிய கோயில் ஒன்றையும் கட்டி உள்ளனர். 1974 ஆம் ஆண்டு இந்த நிலத்திற்கான ரயத்வாரி பட்டா தமிழ்நாடு அரசால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் கிராமத்தில் மையப் பகுதி யில் உள்ளதால் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் சில நேரங்களில் சிக்கண்ணா குடும்பத்தினரை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கின்ற னர். இதற்கு காரணம்,கோயில் நிர்வாக பொறுப்பு மற்றும் விவ சாய நிலத்திலிருந்து சிக்கண்ணா குடும்பத்தினரை விரட்டி அடித்து விட்டு கோவில் நிலத்தை அபகரிப்ப தற்காகவும் முயற்சி நடக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், சிக்கண்ணா குடும்பத்தின் மீது வெங்கட் ராமன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் உண்மைக்கு மாறாக வழக்கு தொடர்ந்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சிலர் தாக்குதல் சம்பவத்தில் ஈடு பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பாதிக்கப்பட்ட தலித் குடும்பம். மேலும், அந்த நிலத்தை ஏலம் விட வேண்டும் இந்து அறநிலையத் துறைக்கு மனு கொடுத்துள்ளனர். மனு குறித்து சிக்கண்ணா குடும்பத்தினர் இந்து அறநிலையத் துறையிடம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் 20 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும் எனவும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, செப். 14 அன்று கோவில் நிலம் ஏலம் வருவதாக அறிவித்தனர். இந்த முடிவால் 30க்கும் மேற்பட்டோர் அனுபவித்து வரும் சிக்கண்ணா குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து கோவில் நில குத்தகைதாரர்கள் சங்க மாவட்டத் தலைவர் அனுமப்பா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பிரகாஷ், முருகன், விஜயகுமார்,சந்திரசேகர், சிவப்பா, வாலிபர் சங்க தலைவர்கள் இள வரசன், பட்டாபி ஆகியோர் கோவில் நில ஏல கூட்டத்தில் பங்கேற்றனர். வருவாய்,காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரி கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், தலை முறை முறை யாக கோவிலையும், நிலத்தையும் பராமரித்து வரும் சிக்கண்ணாவின் பரம்பரை குடும்ப உறுப்பினர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நிலத்தை ஏலம் விட அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரி வித்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்துடன் மாற்று சமூகத்தினர் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் ஆணை யருக்கு அதிகாரிகள் தகவல் தெரி வித்துள்ளனர். சங்கத் தலைவர்கள் தலையீடு காரணமாக ஏலம் விடுவதை செப். 20 தேதி வரை நிறுத்தி வைத்தனர்.