தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2024 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் பிரிவில் வெற்றி பெற்ற சென்னை மாணவி அன்பு கதிருக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி பரிசு வழங்கினார். விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா உடன் உள்ளார். கல்லூரி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் ஈரோடு அணி தங்கப் பதக்கம் வென்றது. சென்னை அணி வெள்ளிப் பதக்கமும், சேலம் அணி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின