அவிநாசி, பிப்.21 உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெள்ளியன்று அவிநாசியில் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு அவிநாசியில் தமிழர் பண்பாட்டு கலாச்சாரப் பேரவை அறக்கட்டளை மற்றும் அவிநாசி பொதுநல அமைப்புகள் இணைந்து பேரணி பொதுக் கூட்டம் நடத்தின. முன்னதாக, அரசு பயணியர் விடுதி முன்பு பேரணி துவங்கி, வஉசி திடலில் நிறைவடைந்தது. இப் பேரணியில் தமிழ் மொழியை காப்போம், காம கயவர்களே பெண்களை தீண்டாதீர்கள், தமிழக அரசே போதைக்கு எதி ரான நடவடிக்கையை எடு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வஉசி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தமிழர் பண் பாட்டு கலாச்சார பேரவைத் தலைவர் நடராசன் தலைமை வகித் தார். இதில், புலவர் ராமலிங்கம், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் தெக்கலூர் பழனிச்சாமி, பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சுப்பிரமணி யன், கலாச்சாரப் பேரவை பொதுச்செயலாளர் வெங்கடாச் சலம் உள்ளிட்டோர் பேசினர். முடிவில், அருணாச்சலம் நன்றி கூறினார்.