districts

ஒரு வருடமாக சிறுத்தையை பிடிக்காது ஏன்? பொதுமக்கள் கேள்வி

சேலம், ஜூன் 2- ஓமலூர் அருகே கடந்த ஒரு வருட மாக சிறுத்தை நடமாட்டம் இருப் பதை கண்டறிந்தும், இதுவரை சிறுத் தையை பிடிக்காமல் இருப்பது ஏன்? என வனத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி ஊராட்சிக் குட்பட்ட கோம்பக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் 3 மாடு கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வெள் ளாடுகளை வளர்த்து, வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில், சனி யன்று வழக்கம் போல் ஆடு மற்றும்  மாடுகளை அருகிலிருக்கும் கரட்டில்  மேச்சலுக்கு அழைத்துச் சென்ற பின் னர், ஆடுகளை பட்டியில் அடைத் தும், மாடுகளை கட்டான் தரையில் கட் டிவிட்டு உறங்கி விட்டார். இதைத் தொடர்ந்து ஆடு, மாடுகளை மேய்ச்ச லுக்காக அழைத்துச் செல்வதற்காக கட்டான் தரையை பார்த்துள்ளார். அப்போது மூன்று மாடுகளில் ஒரு  கருவுற்ற பசுமாடு கழுத்து உள்ளிட்ட  உடலில் பல்வேறு இடங்களில் காயம டைந்த நிலையில், உடல் சிதைந்து  இறந்து கிடந்துள்ளது. இதைக்கண்டு  அதிர்ச்சியடைந்த அவர், வனத்துறை யினருக்கும், வருவாய்த்துறையின ருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த சேலம் மாவட்ட வனத் துறை அலுவலர் செல்வகுமார் தலை மையிலான அதிகாரிகள், மாட்டின் உடம்பில் கடிப்பட்ட காயங்கள், சிறுத்தை நடந்து சென்ற கால் தடம்,  மாட்டை அடித்து தின்றுவிட்டு புரண்ட  தடையங்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டனர். இதனிடையே பொது மக்களும் இரவு நேரங்களில் தனி யாக வெளியே வரவேண்டாம். குழந்தைகளை வெளியே விட வேண்டாம் என அறிவுறுத்தினர். அப் பொழுது பொதுமக்கள், ஏற்கனவே காடையாம்பட்டி வட்டாரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை ஒரு வருடத்திற்கு முன்பாகவே கண் டுபிடித்தும், இதுநாள் வரை அந்த சிறுத்தையை ஏன் பிடிக்கவில்லை? என கேள்வி எழுப்பினர். அதற்கு  அலுவலர் போதுமான கேமராக் கள், கூண்டுகள் மற்றும் வன காவ லர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. அதை பிடிப்பதற்கு தீவிர முயற்சி எடுக்கப்படும், என உறுதியளித்தனர்.

;