districts

img

குடிசை வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி பெண் பலி

இளம்பிள்ளை, டிச.19- இளம்பிள்ளை அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ  விபத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள  காளிகவுண்டம்பாளையம் அரண்மனை காடு பகுதி யைச் சேர்ந்தவர் சக்திவேல். பனைமரம் ஏறும் தொழிலா ளியான இவருக்கு தங்கமணி (28) என்ற மாற்றுத்திற னாளி மனைவியும், அகல்யா (6) என்ற பெண் குழந்தை யும் உள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று சக்திவேல் வேலைக்கு சென்றபோது, தங்கமணியும், அகல்யாவும் வீட்டில் இருந்த நிலையில், மதியம் ஒரு மணியளவில் வீடு தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்தவர்களின் அலறல்  சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்து தீயை  அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென பற்றி  எரிந்தது. இதில் சிறுமி அகல்யா தீக்காயத்துடன் மீட்கப் பட்ட நிலையிலும், தங்கமணி உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவால் தீ பிடித்ததா? என்ற  பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

;