districts

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தேர்தல்: தலைவர், பொதுச்செயலாளர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்

திருப்பூர், செப். 9 - திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தேர் தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலை வர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு  தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல்  செய்திருக்கும் நிலையில் அவர்கள் போட் டியின்றி தேர்வாகும் நிலை ஏற்பட்டுள் ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தேர் தல் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெ றுகிறது. கே.எம்.நிட்வேர் ஏற்றுமதி நிறு வன உரிமையாளர் கே.எம்.சுப்ரமணியன்  சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். செப்.  9ஆம் தேதி வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்  தாக்கல் முடிவடைந்த நிலையில் வேறுயா ரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக் கல் செய்யாததால் கே.எம்.சுப்பிரமணி யன் தலைவராக தேர்வாகிறார். அதேபோல் பொதுச் செயலாளர் பத விக்கு எஸ்.டீ எக்ஸ்போர்ட்ஸ் திருக்குமரன்  வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நிலை யில், வேறு யாரும் இப்பதவிக்குப் போட்டி யிடவில்லை. இதனால் பொதுச் செயலாள ராக எஸ்.டீ எக்ஸ்போர்ட்ஸ் திருக்குமரன்  தேர்வாகிறார்.

அதேசமயம் இரண்டு துணைத் தலை வர்கள் பதவிக்கு பெஸ்ட் ஆர்.ராஜ்குமார்,  எஸ்என்கியூஎஸ் இளங்கோவன் ஆகியோ ருடன் மேலும் ஒருவர் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். அதே போல் இரு இணைச் செயலாளர்கள் பத விக்கு சைல்வின் சின்னசாமி,ஈஸ்டன் குளோபல் கிளாத்திங் டி.குமார் ஆகி யோருடன் மற்றொருவர் வேட்பு மனுத் தாக் கல் செய்திருக்கிறார். பொருளாளர் பத விக்கு ராயல் கிளாசிக் மில் கோபாலகி ருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல் செய்தி ருந்த நிலையில், மற்றுமொரு வரும் வேட்பு  மனுத் தாக்கல் செய்திருக்கிறார். அதே போல் 20 செயற்குழு உறுப்பினர்கள் பத விக்கு 32 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய் துள்ளனர். புதன்கிழமை தொடங்கி மூன்று நாட் கள் வேட்பு மனுத்தாக்கல் வெள்ளிக்கிழ மையுடன் நிறைவடைந்தது.சனிக்கிழமை வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். தகுதி யுள்ள வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு செப் டம்பர் 12ஆம் தேதி பட்டியல் வெளியிடப்ப டும். அதன் பிறகு வேட்பு மனு வாபஸ் பெற  14ஆம் தேதி வரை இரு நாட்கள் காலக்கெடு  அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் பட்டியல்  செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும். தற்போது வேட்பு மனுத் தாக்கல் செய்தி ருந்தாலும், இறுதிப் பட்டியல் வெளியிடும் சமயம்தான் போட்டி இருக்குமா என்ற தெளிவான விபரம் தெரியவரும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

;