districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரேலியா அணை நிரம்பியது

உதகை, ஜூலை 6- ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட குன்னூர் அருகே உள்ள ரேலியா அணை தற்போது நிரம்பியுள்ளது. குன்னூர் நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இந்த அணையிலிருந்து நகராட்சி யின் 30 வார்டுகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. ரேலியா அணை ஆங்கிலேயர் காலத்தில் அப் போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டப்பட்டது. இதன்  கொள்ளளவு 43.7 அடியாக உள்ளது. பருவமழை காலத்தில்  அவ்வப்போது அணை நிரம்பி வழிவது உண்டு. அணையி லிருந்து வீணாக செல்லும் தண்ணீரை தேக்கி வைத்து அதனை  வறட்சி காலத்தில் மக்களுக்கு வழங்க வசதியாக அணையை  ஒட்டி தடுப்பணை கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.  தற்போது உதகை மற்றும் குன்னூர் பகுதிகளில் கடந்த  சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால்,  ரேலியா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை தற்போது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால், குன்னூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குழாய் பழுதால் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்

தருமபுரி, ஜூலை 6- பென்னாகரம் பேரூராட்சி, 18 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் பழுது ஏற்பட்டு, சரி செய்யாத  நிலையில் குடிநீரை விலைக்கு வாங்கி பொதுமக்கள் பயன் படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் பேரூராட்சி, 18 ஆவது வார்டுக்குட்பட்ட எட்டியாம்பட்டி, முள்ளுவாடி உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும்  மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகரப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஒகேனக்கல்  கூட்டு குடிநீர் மற்றும் சின்னாறு கூட்டு குடிநீர் திட்டத்தின்  மூலம் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் குடிநீர் விநியோ கிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், எட்டியாம்பட்டி மற்றும்  முள்ளுவாடி பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பென்னாகரம் பேரூராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்த நிலையில், குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு, மீண்டும் அதே  பகுதியில் உடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அன்றாட தேவைக்கான குடிநீரை, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாச்சானூர் பிரிவு சாலை அருகே அமைக் கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய கை பம்பு மூலம்  தண்ணீரை எடுத்து வந்தனர். இப்போது, ஆழ்துளை கிணற்றில் போதுமான குடிநீரை பெற முடியாத நிலை ஏற்பட்ட தால், எட்டையாம்பட்டி மற்றும் முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 20 லிட்டர் தண்ணீர் ரூ.30, அன்றாட  தேவைக்காக பயன்படுத்தும் குடிநீர் குடம் ரூ.5 ரூபாய்க்கு  விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனை அறிந்த 18 வது வார்டு உறுப்பினர் சுமித்ரா சந்தோஷ், குடிநீர் குழாய் சரி செய்யும் வரையில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக மூன்று டேங்கர் குடிநீரை வழங் கினார். இதுகுறித்து தகவலறிந்த பேரூராட்சி அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக உடைப்பு  ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்து முறையான குடிநீர் விநி யோகம் செய்வதாக தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவு எதிரொலி - வட்டாட்சியர் அலுவலகம்  ஜப்தி செய்ய முயற்சி

நாமக்கல், ஜூலை 6- ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை நீதிமன்ற ஊழி யர்கள் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம்  பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பகவுண்டர். இவருக்கு பட்டணம், கலரம்பள்ளியில் உள்ள 2 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை,  1996 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்காக அரசு கையகப்படுத்தியது. அதற் காக அப்போது வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்றும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்  நாமக்கல் நீதிமன்றத்தில் காளியப்பகவுண்டர் வழக்கு தொடர்ந்தார். அவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வழக்கை நடத்தி வந்தனர். தற்போது ராசிபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.  இதற்கிடையே 2008 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சுமார் ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இத்தொகையை ஆதி திராவிடர் நலத்துறை வழங்குவதில் காலதாமதம் செய்து வருவதால், மேல் முறையீடு செய்தனர். அதன்பேரில் ராசிபுரம்  வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தர விட்டார்.  இதன்படி, புதனன்று நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய   ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப் போது, “மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச்சொல்லி தேவை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது ஜப்தி  செய்ய வேண்டாம்” என வட்டாட்சியர் சுரேஷ் கேட்டுக் கொண்டார். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.

கோமிங் ஆப்ரேசன்:  சேலத்தில் 6,533 பேர் மீது வழக்கு

சேலம், ஜூலை 6- சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கோமிங் ஆப் ரேசனில் (சாலை விதிமீறல்) மொத்தம் 6 ஆயிரத்து 533 பேர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூன் 3 ஆம் தேதி முதல்  ஜூலை 2 ஆம் தேதி வரை கோமிங் ஆப்ரேசன் மேற்கொள்ள  காவல் துறை தலைமையகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மேற் பார்வையில், 28 ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் சுழற்சி  முறையில் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் 6  ஆயிரத்து 533 வாகன ஓட்டிகள் மீது சாலை விதிகளை  மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போதையில்  வாகனம் ஓட்டிய 377 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு,  வாகனங்கள் பறிமுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டது. அத்துடன் மாவட்டத்தில் உள்ள 910 ரவுடிகளில், 741 பேரை வரவழைத்து அதிகாரிகள் எச்சரித்தனர். இது போல் சேலம் மாநகர காவல் ஆணையர் தலைமையில் மாநகர பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப் பட்டது.

திருப்பூரில் இருந்து சனி, ஞாயிறுகளில் 35 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

திருப்பூர், ஜூலை 6 - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் மண்ட லம் சார்பில் திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி  நாட்களான சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் திருப்பூர்  மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி  திண்டுக்கல், திருச்சி மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற் கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடு தலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக் குவரத்துக் கழக திருப்பூர் மண்டலப் பொது மேலாளர் மாரி யப்பன் தெரிவித்துள்ளார்.

ரூ.14 கோடியில்  புதிய திட்டப்பணிகள்

திருப்பூர், ஜூலை 6- திருப்பூர் மாவட்டம், ஊத் துக்குளி ஊராட்சி புஞ்சை தளவாய்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் புதிய 3  சாலை மேம்பாட்டுப் பணி களையும், செட்டிகுட்டை ஊராட்சி பகுதியில் ரூ.5.39  கோடி மதிப்பீட்டில் 5 சாலை  மேம்பாட்டுப் பணிகளையும், வேலம்பாளையம் ஊராட்சி யில் ரூ.15.25 லட்சம் மதிப் பீட்டில் புதிய பகுதி நேர நியா யவிலை கடையையும், வள் ளிபுரம் ஊராட்சியில் ரூ. 6.11  கோடி மதிப்பீட்டில் சாலை  மேம்பாட்டுப் பணி என மொத் தம் ரூ.14 கோடி மதிப்பீட் டில் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் திறந்து வைத் தார். மேலும், வேளாண்மை  மற்றும் உழவர் நலத்துறை யின் சார்பில் விவசாயி களுக்கு வேளாண் உபகர ணங்களை வழங்கினார்.

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அம்பேத்கர், கலைஞர் பேச்சு போட்டிகள்

திருப்பூர், ஜூலை 6 - திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார் பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு  அண்ணல் அம்பேத்கர் மற்றும் கலைஞர் பிறந்தநாள் பேச்சுப்  போட்டிகள் நடத்தப்படுகிறது.

திருப்பூரில் லஞ்சம் வாங்கிய தொடக்கக் கல்வி அலுவலர் கைது

திருப்பூர், ஜூலை 6 - திருப்பூரில் பணி வரன்முறை ஆணை வழங்க ஐந்தாயிரம்  ரூபாய் லஞ்சம் வாங்கிய மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்  லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர் திருப் பூர் காதர் பேட்டை பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆசிரி யராக பணியாற்றி வந்தார். கடந்த 2006ஆம் ஆண்டு அங்கு  தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து  2016ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய  கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில்  கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான  காலகட்டத்தில் பணியாற்றியதற்கான பணி வரன்முறை  ஆணை பெற வேண்டி திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி  அலுவலகத்திற்கு விண்ணப்பித்து இருந்தார். இந்த பணி  வரன்முறை ஆணையை வழங்கவேண்டும் என்றால், 5 ஆயி ரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென மாவட்ட தொடக்கக்  கல்வி அலுவலர் அமுதா தெரிவித்துள்ளார்.  இதையடுத்து ஸ்ரீதேவி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்  அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்,  ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஸ்ரீதேவியிடம் கொடுத்து அமுதாவிடம் கொடுக்கும்படி கூறியுள்ளனர். அதம் ன்படி வியாழனன்று மாவட்ட தொடக்கக்கல்வி அலுவல கத்திற்கு வந்த ஸ்ரீதேவி, அமுதாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார்  வழங்கிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத் துள்ளார். அப்பொழுது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்  அமுதாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2475 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நான்கு பேர் கைது

திருப்பூர், ஜூலை 6 - திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசியை  சேகரித்து வாகனத்தில் கடத்திய நான்கு பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு வாகனங்களும், 2475 கிலோ  ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் அவி நாசி சாலை குமார் நகர் பகுதியில் குடிமை பொருள் வழங்கல்  குற்றப் புலனாய்வு காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்து விசாரணை செய்த னர். இதில் உதயகுமார் என்று அந்த நபர் ரேஷன் அரிசி கடத் தும் வாகனத்திற்கு பைலட்டாக செயல்படுவதாக தெரிவித் தார். அவருக்குப் பின்னால் வந்த, நான்கு சக்கர வாகனத்தில்,  ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டதையும் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் அந்த நான்கு சக்கர  வாகனத்தை பறிமுதல் செய்து, அதில் வந்த கோவிந்தராஜ், நல்லசிவம் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர் களது வாகனத்தில் திருப்பூர் சாமுண்டிபுரம், குமார்நகர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் விலையில்லா ரேஷன் அரிசியை  பெற்று 45 கிலோ எடை கொண்ட 55 மூட்டைகளாக கட்டி  வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. இவர்கள் மூவரும் ரே ஷன் அரிசியை கடத்திச் சென்று நாமக்கல் மாவட்டத்தைச்  சேர்ந்த ஜீவானந்தம் என்பவரிடம் ஒப்படைக்க இருந்ததாக  தெரிவித்தனர். எனவே இம்மூரையும் காவல்துறையினர்  கைது செய்ததுடன், 2475 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமு தல் செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்  நல்லசிவம் என்பவரையும் திருப்பூர் மொரட்டுபாளையம்  அருகே கைது செய்தனர்.

அரை மணி நேரத்தில் குடிநீர் இணைப்பு

திருப்பூர், ஜூலை 6 – ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், 16, வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தங்கராஜ் தனி நபர் இல் லக் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்திருந்தார். அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் உடனடியாக அவருக்கு குடிநீர் இணைப்பு  தர உத்தரவிட்டதைத் தொடர்ந்து அரை மணி நேரத்தில் அவ ரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

ஈரோடு, ஜூலை 6- பெருந்துறை அருகே நீட் மற்றும் யுபிஎஸ்சி தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கொளத்துப் பாளையம் காலனியைச் சேரந்தவர் சசிகுமார் மகள் அமிர்த வர்ஷனி (23). இவர் ஐஎம்எஸ்சி படித்து முடித்து விட்டு வீட் டில் இருந்து யுபிஎஸ்சி படித்து வந்துள்ளார். பின்பு என்ஜிசி - நீட் தேர்வு எழுதினார். அத்தேர்வு கடினமாக இருந்ததாகக் கூறி னார். எனவே, கடந்த 2ஆம் தேதி யுபிஎஸ்சி அமலாக்க தேர்வு  எழுதியுள்ளார். இருப்பினும், எழுதிய தேர்வில் நம்பிக்கை இல்லை என தாயாரிடம் தெரிவித்துள்ளார். இவரது தாயார்  லட்சுமியும் பரவாயில்லை, அடுத்த வருடம் பார்த்துக் கொள்ள லாம் என நம்பிக்கை அளித்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி அமிர்தவர்ஷனி தனது  அறைக்குள் சென்று தூக்கிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் தொங்கியவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர், அமிர்தவர்ஷனி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ள னர். இதுகுறித்து, வெள்ளோடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று மின்தடை

நாமக்கல், ஜூலை 6- நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி துணை மின் நிலையத்தில் வெள்ளியன்று (இன்று) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இத னால் சோழசிராமணி, சுள்ளி பாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன் இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், பி.ஜி. வலசு ஆகிய பகுதிகளில் வெள்ளியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப் படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியா ளர் வரதராஜன் தெரிவித் துள்ளார்.

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பராமரிப்பு பணி

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பராமரிப்பு பணி சேலம், ஜூலை 6- மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்தில் புதனன்று மின் உற் பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலை யமும் இயங்கி வருகிறது. பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டு கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது புதிய  அனல் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக புதனன்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு  பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

உதகை, ஜூலை 6- முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிக் குள் அத்துமீறி நுழைந்த சுற்றுலா பயணிகளுக்கு வனத் துறையினர் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இதைக்காண வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்ற னர். இந்நிலையில், காப்பகத்திற்குட்பட்ட சாலையில் வாக னத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே வாகனங் களை நிறுத்தி ஓய்வு எடுத்து செல்கின்றனர். மேலும், பலர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவதாக வனத்துறைக்கு தக வல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிங்காரா வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணி மேற் கொண்டனர். அப்போது மாவநல்லா பகுதியில் உள்ள வனத் துக்குள் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணி கள் அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து வனத்துக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிக ளுக்கு ரூ.4000 அபராதம் விதித்தனர். வனப்பகுதிக்குள் அத்து மீறி நுழைந்தால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள் ளது. எனவே, அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.7 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, ஜூலை 6- தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவங் டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்ப னைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு புதனன்று 1,693 கிலோ பட்டுக்கூடு கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு  கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.492க்கும், குறைந்த பட்சமாக ரூ.308க்கும், சராசரியாக ரூ.417.71க்கும் விற்பனை யானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 7 ஆயிரத்து 300க்கு வர்த்த கம் நடைபெற்றது.