districts

அமைச்சர் உறுதிமொழியை ஏற்று விசைத்தறி வேலைநிறுத்தம் வாபஸ்

திருப்பூர், செப். 23 - தமிழக மின்துறை அமைச்சர் செந் தில் பாலாஜியின் உறுதிமொழியை ஏற்று கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி  உரிமையாளர்கள் சங்கத்தினர், விசைத் தறி வேலை நிறுத்தப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். சாதா விசைத்தறிக்கு தமிழ்நாடு மின் சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தி அறிவித்த கடுமையான மின்  கட்டண உயர்வில் இருந்து முழுமை யான விலக்கு அளிக்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 16ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத் தப் போராட்டத்தை நடத்தி வந்தனர். அத் துடன் மின் கட்டண உயர்வை வாபஸ்  பெறும் வரை உயர்த்தப்பட்ட மின் கட்ட ணத்தை செலுத்தப் போவதில்லை என் றும் முடிவு செய்து அறிவித்தனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத் தில் கோவை, திருப்பூர் மாவட்டங்க ளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர். சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப் பட்டன. இதனால் பல கோடி ரூபாய்  அளவுக்கு துணி உற்பத்தி பாதிக்கப்பட் டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம்  நடைபெற்று வந்த நிலையில் திருச் செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வ ரன் முன்முயற்சி காரணமாக, தமிழக  மின்துறை அமைச்சர் செந்தில் பாலா ஜியை விசைதறி சங்க நிர்வாகிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென் னையில் நேரில் சந்தித்து இந்த கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நிர்வாகிகள் கூட்டம்

அப்போது அமைச்சர், முதல்வரு டன் கலந்து பேசி நல்ல முடிவை அறி விப்பதாக உறுதியளித்தார். அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையா ளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. இதில், முதல்வர் நல்ல முடிவை அறி விப்பார் என்ற மின்துறை அமைச்சரின்  வாக்குறுதியை ஏற்று, வெள்ளிக்கி ழமை முதல் வேலை நிறுத்தப் போராட் டத்தை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்த  வேலை நிறுத்தப் போராட்டம் முடி வுக்கு வந்தது. மேலும் செப்டம்பர் 10ஆம் தேதி  முதல் உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை  மறு அறிவிப்பு வரும் வரை செலுத்துவ தில்லை என்றும், விசைத்தறியாளர்க ளுக்கு நல்லதொரு மறு அறிவிப்பு வரும்  வரை தமிழக மின்வாரியம் மேல் நடவ டிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து, சாதா விசைத்தறித் தொழிலையும், பல ஆயிரம் விசைத்தறியாளர்களையும், பல லட்சம் விசைத்தறி தொழிலாளர் குடும்பங்களையும் பாதுகாக்க வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். முன்னதாக அவிநாசி, தெக்கலூர் விசைத்தறி சங்கங்களைச் சேர்ந்த நிர் வாகிகள், அமைச்சரின் உறுதிமொ ழியை ஏற்று வியாழக்கிழமை முதலே வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக் கிக் கொள்வதாக முடிவு செய்தனர்.
 

;