districts

விசைத்தறிகளை எடைக்கு விற்கும் அவல நிலை

கோவை, மே 19- ஜிஎஸ்டி வரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கார ணங்களால் கோவை திருப்பூர் மாவட்டங்களில் இயங்கி வரும் பெரும்பாலான விசைத்தறிகள் உடைக்கப்பட்டு எடைக்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவை திருப்பூர் மாவட்டங் களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.  மின் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி வரி, கூலி பிரச்னை, பாவு நுால் கிடைக் காதது, துணிகளுக்கு போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட கார ணங்களால், விசைத்தறி காடா உற்பத்தி தொழில் நாளுக்கு நாள் நலிவை சந்தித்து வருகிறது. இதன்  காரணமாக கோவை மாவட்டத் தில் விசைத்தறிகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தொழில் பாதிப்பு கார ணமாக, தறிகளை விற்பனை செய் வதும், உடைக்கப்பட்டு பழைய இரும்புக்கு செல்வதும் பரவலாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சூலூர் அருகே, காடம்பாடி கிராமத்தில், குடோனில் இருந்த விசைத்தறிகள் உடைக்கப்பட்டன.  இதுகுறித்து கூலிக்கு நெசவு  செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகி, சண்முகசுந்தரம் கூறுகையில், கோவை திருப்பூர் மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்ததாக பெரும்பாலானோரின் வாழ்வாதாரமாக விசைத்தறிகள் இருந்து வருகின்றன. கடுமையான மின் கட்டண உயர்வு, உதிரி பாகங் களின் விலை ஏற்றம், நிலையில் லாத நூல் விலை உள்ளிட்ட பல் வேறு சூழல்களை சமாளிக்க முடி யாமல் எடைக்கு விற்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர் கொடுக்கும் மில்கள் கடந்த சில  மாதங்களாக ஒப்பந்தப்படி உயர்த் தப்பட்ட கூலியை கொடுக்காமல் இழுத்தடித்து வரும் நிலையில்,  விசைத்தறிகளை இயக்கும் தொழி லாளிகளுக்கு உயர்த்தப்பட்ட கூலியை சரிவர கொடுக்க இய லாத சூழல் ஏற்பட்டுள்ளது.  விசைத்தறியாளர்கள் இந்த தொழிலில் இருந்து வெளியேறும் இக்கட்டான சூழலுக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளோம். பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டு எங்க ளது பிரச்சனைகளை அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்றாலும், தற்போது வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. விசைத்தறி தொழிலில் வாழ்வாதாரம் இல்லை  என்பதால் இளைஞர்கள் பலர் மாற்றுத் தொழிலை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு  விசைத்தறிக்கூடம் மூடப்பட்டால், அங்கு விசைதறிகளை இயக்கும் தொழிலாளர்கள், நூல் சுற்றுபவர் கள், பாவுநூல் ஏற்றி இறக்கும்  தொழிலாளர்கள், வாகன ஓட்டு நர்கள் என பலரது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும்.  ஒன்றிய, மாநில அரசுகள் உத வினால் மட்டுமே விசைத்தறி தொழிலை காப்பாற்ற முடியும்.  இல்லையெனில் விசைத்தறி தொழில் காணாமல் போவதை  தடுக்க முடியாது. வங்கிகளில் பெற்ற கடன்களை கட்ட முடி யாமல் பல விசைத்தறிக்கூடங்கள் ஏலத்திற்கு சென்று விட்டன. மின்  கட்டண குறைப்பு, மில்களில் போடப்பட்ட ஒப்பந்த கூலியை  பேச்சுவார்த்தை மூலம் பெற்றுத்  தருதல் உள்ளிட்ட நடவடிக்கைக ளில் அரசு ஈடுபட்டால் மட்டுமே மீதம்  இருக்கும் விசைத்தறி கூடங்கள்  காப்பாற்றப்படும் என தெரிவித் தார்.  விசைத்தறிகளை எடைக்கு விற்பதற்காக உடைக்கும் விசைத் தறி உரிமையாளர் நடராஜ் என்ப வர் பேசும்போது, கடந்த 15 ஆண்டு  காலமாக விசைத்தறித் தொழிலில்  ஈடுபட்டு வந்தேன். ஒரு தறி சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு வாங்கி  தொழில் செய்து வந்த நிலையில், தற்போது எடை விலையில் கிலோ 30 ரூபாய்க்கு கேட்பதற்கு கூட யாரும் முன் வருவதில்லை. மின்  கட்டண உயர்வு உள்ளிட்ட விசைத் தறியாளர்களின் பிரச்சனைகளுக் காக விசைத்தறி உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத் தியும் இந்த தொழிலை பாதுகாப் பதற்காக ஒன்றிய, மாநில அரசுகள்  எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பல்வேறு பிரச்சனைக ளுக்கு இடையே வாழ்வாதாரத்துக் கான அடிப்படை வருவாய் குறைந்து வருகிறது. மேற் கொண்டு விசைத்தறி தொழிலை தொடர்ந்து நஷ்டத்தில் நடத்த முடி யாததால் தற்போது தறிகளை எடைக்கு விற்று உள்ளேன் என தெரிவித்தார்.

;