சைக்கிள் போட்டி
ஈரோடு, செப். 10- பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி (செப்.15) தமிழக அரசால் மிதிவண்டி போட்டிகள் நடத் தப்படுகிறது. இப்போட்டி வரும் 15 ஆம் தேதி காலை 7 மணி யளவில் ஈரோடு மாவட்டத் தில் ஈரோடு-பெருந்துறை சாலையில், வீரப்பம்பாளை யம் பிரிவிலிருந்து நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை சென்று, மீண்டும் வீரப்பம்பாளையம் பிரிவிற்கு வந்து சேர வேண் டும். 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ துாரம் கடக்க வேண்டும். போட்டியாளர்கள் தங்கள் பள்ளியிலிருந்து வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும். போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.5ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2ஆயிரம் வழங் கப்படும். 4 முதல் 10 வரை இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: சிபிஎம் அறிவிப்பு
தாராபுரம், செப்.10- தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடரும் திருட்டு சம்பவங் களை தடுத்து நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாரா புரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த சம்பவங்களில் பெரும்பாலும் குற்றவாளிகள் கைது செய்யப் படுவது இல்லை. இதனால் சிறு வியாபாரி களைகூட விட்டு வைக்காமல் பாத்திரங்களை திருடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தாராபு ரம் பேருந்து நிலையம் முன்பு லோகநாதன் என்பவர் தள்ளு வண்டியில் வைத்து இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வியாபாரத்தை முடித்துவிட்டு சென்றுவிட்ட நிலையில் இரவு நேரத்தில் அவரது தள்ளுவண்டியில் இருந்த கேஸ் அடுப்பு உட்பட கடையில் வைத்தி ருந்த பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து தாராபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் பகுதியில் கடந்த 6 மாதத்தில் மட் டும் 20க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வழக்குகளில் பெரும்பாலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. எனவே தாராபுரம் காவல்துறையினர் உரிய நடவ டிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய் வதோடு திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளை பிடிப்பதில் அலட்சியம் காட்டினால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்ப டும் என தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கிய நிலத்திற்கு தடையின்மை சான்று கோரி மனு
அவிநாசி, செப்.10 - சேவூர் தேவேந்திர நகர், வெண்ணிகாடு பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட நிலத்திற்கு, தடையின்மை சான்று கோரி அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் சனியன்று மனு அளித்த னர். திருப்பூர் மாவட்டம், சேவூர் ஊராட்சி, தேவேந்திர நகர், வெண்ணிகாடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இவர்களுக்கு கடந்த, 1996 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த மாதவி என்பவர், தன் வீட்டின் மீது வங்கிக்க டன் பெறுவதற்காக, தங்கள் நிலத்தின் மீதான உரிமைச் சான்று வாங்குவதற்கு அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித் துள்ளார். அவரது ஆவணங்களை பார்த்த சார்பதிவாளர், குறிப்பிட்ட இடம், சென்னை வக்பு வாரியத்துக்கு சொந்தமானது எனவும், அந்நிலத்தை வாங்கவோ, விற்கவோ கூடாது எனவும் கடந்த ஆக.23 ஆம் தேதி கடிதம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதை யறிந்த அப்பகுதி பொதுமக்கள் சேவூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று மனு அளித்து முறையிட்டனர். அப்போது, கிராம நிர் வாக அலுவலர் ராயப்பன், வருவாய் ஆய்வா ளர் திவ்யா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து எவ்வித கடிதமும் வருவாய்த்துறையினருக்கு வரவில்லை. 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது உறுதி என் றார். வட்டாட்சியர் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பேசி, விபரம் பெறப்பட்டு வரும் செப்.13 தேதியன்று (செவ்வாய் கிழமை) உரிய பதிலளிப்பதாக தெரிவித்த னர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பரமசிவம்பாளையம் குட்டையில் வண்டல் மண் எடுக்க 10 நாள் அவகாசம் வழங்க கோரிக்கை
திருப்பூர், செப். 10 - திருப்பூர் அருகே பொங்குபாளையம் ஊராட்சி, பரமசிவம்பாளையம் குட்டையில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் வண்டல் மண் எடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் கோரியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார் பில் பரமசிவம்பாளையம் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் வெள்ளியன்று கிராம விவ சாயிகள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், ஒன்றிய தலைவர் ரங்கசாமி, ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம், துணைச்செயலாளர் கோவிந் தசாமி, பி.பழனிச்சாமி உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், பரமசிவம்பாளையம் கருப்பராயன் கோவில் அருகில் உள்ள குட்டையைத் தூர் வாரி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. இதனால் குட்டையில் கருவேல மரங்களும், செடி, கொடிகளும் வளர்ந்து, புதர் மண்டி அடர்ந்த வனப்பகுதி போல் குட்டை மேடாகி விட்டது. எனவே இங்கு மழைநீர் தேங்க வழி யில்லாமல் விரயமாகிவிடுகிறது. நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த குட்டையில் கருவேல மரங்களையும், புதர்களையும் அகற்றி, தூர் வாரி நீர் தேங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், விவசாயிகள் சங்கமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. இதன் விளைவாக பரம சிவம்பாளையம் குட்டையைத் தூர்வார, விவ சாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். இக்குட்டையில் 4115 கனமீட்டர் மண் எடுத் துக் கொள்ளலாம் என்று அளவையும் நிர்ண யிக்கப்பட்டது. இதன்படி கிராம நிர்வாக அலு வலரிடம் சான்று பெற்று விவசாயிகள் 18 பேர் வண்டல் மண் எடுக்க ஒப்பந்த பத்திரம் பெற்ற னர். அவர்களுக்கு 5 நாட்கள் அனுமதி வழங் கப்பட்டது. ஆனால் குட்டையில் தடம் ஏற்ப டுத்தி வண்டல் மண் எடுக்க தொடங்குவ தற்கே இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. இத னால் மீதி மூன்று நாட்கள் அவகாசத்தில் விவ சாயிகள் முழுமையாக வண்டல் எடுக்க முடிய வில்லை. எனவே ஐந்து நாட்கள் கால அவகா சம் போதாது. விவசாயிகளுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க சிலரின் சுயலாப அரசியல் நோக்கத்திற்காக அந்த குட்டையில் மரத்தை வெட்டிக் கடத்தியதாக தினசரி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது விவசா யிகளுக்கும், பொது மக்களுக்கும் வருத் தத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போதுள்ள நிலையில், குட்டையில் சாய்ந்தும், பெயர்ந்தும், காய்ந்தும் கிடக்கும் மரங்களை அகற்றி, 5 ஆயிரம் கனமீட்டர் அளவுக்கு வண்டல் மண் எடுத்தால்தான் குட் டையை முழுமையாக தூர் வார முடியும். மழைநீரைத் தேக்கி, நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்கும் நோக்கம் நிறைவேறும். இதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அண்ணா, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள்
உடுமலை, செப்.10- உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடைப்பெறுகிறது. உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் அண்ணா மற்றும் பெரியார் பிறந்த நாள் விழாவை யொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி களுக்கு ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி அளவில், பெரியார் விரும்பிய சமு தாயம், பகுத்தறிவு பகலவன் அண்ணா, உல கம் போற்றிய உன்னத தலைவர் அண்ணா, தமிழக முதலமைச்சராய் அண்ணா ஆற்றிய அரும்பணிகள் என்ற தலைப்புகளும், கல் லூரி மாணவ, மாணவியருக்கு பெரியார் என் னும் சமூக சீர்திருத்தவாதி, பெரியாரும் பெண்ணியமும், அண்ணாவும் அழகு தமி ழும், அண்ணாவின் இலக்கியப் பணி, அண் ணா ஆகிய தலைப்புகளும் கொடுக்கப்பட் டுள்ளன. போட்டிகள் உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் செப்.17 ஆம் தேதி சனிக்கி ழமை காலை 9:30 மணிக்கு நடக்கிறது. கலந்து கொள்ள விரும்புவர்கள் கிளை நூலகம் எண் இரண்டில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு 8667386586/ 9944066681. உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுக்காவை சேர்ந்த மாணவ, மாணவியர் மட்டும் கலந்து கொள்ளலாம். மேலும் முதல் மூன்று இடங்களை பிடிக் கும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற் றும் புத்தகம் பரிசாக வழங்கப்படும். இதை தொடர்ந்து உடுமலை வட்டத்தில் நல்லாசிரி யர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது என நூலக வாசகர் வட்டம் மற்றும் நூலகர்கள் சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நூல கர் மகேந்திரன், வாசகர் வட்ட தலைவர் இளமுருகு, துணை தலைவர் சிவக்குமார், வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன், மக ளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி மற்றும் நூலகர்கள் பிரமோத், அஷ்ரப், சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் செய்து வருகின்றனர்.
காலை சிற்றுண்டி திட்டத்தில் சேமியா கிச்சடி, கேசரி வழங்கல்
ஈரோடு, செப்.10- காலை சிற்றுண்டி திட்டத்தில் ஈரோடு தொடக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சேமியா கிச்சடி, கேசரி வெள்ளி யன்று வழங்கப்பட்டது. அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச் சத்து குறைபாட்டை போக்கி, இடைநிற்றலை தவிர்க்க காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்காக ரூ.33 கோடியே 56 லட்சம் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி தொடங்கி வைக்க உள்ளார். முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இந்தநிலையில், இந்த திட்டத்தை முன்கூட்டியே பரிச் சார்ந்த முறையில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் வெள்ளியன்று தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங் கப்பட்டது. ஈரோடு வட்டத்தில் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 26 தொடக்க பள்ளிக்கூடங்களில் வெள்ளி யன்று காலை 2 ஆயிரத்து 445 மாணவ - மாணவிகளுக்கு கேசரி, சேமியா கிச்சடி ஆகியவை வழங்கப்பட்டது. மாநக ராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒட்டு மொத்தமாக உணவு தயாரிக்கப்பட்டு மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு காலை 8 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. ஈரோடு காளைமாடு சிலை அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, மேயர் நாகரத்தினம் ஆகியோர் மாணவ, மாணவிக ளுக்கு உணவு பரிமாறினர். இதில் முதன்மை பொறியாளர் மரு தம், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையாளர் பாஸ்கர், தொடக்கக்கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பவளப்பாறைகள் விற்பனை: ஒருவர் மீது வழக்கு
கோவை, செப்.10- பவளப்பாறைகள் விற்பனைக்கு வைத்திருந்த ஒருவர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், பேரூர், தீத்திப்பாளையம் பகுதியில் பவளப்பாறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதை யறிந்த மதுக்கரை வனச்சரக அலுவலர் ப.சந்தியா தலைமை யிலான குழுவினர் தீத்திப்பாளையம், கோவை கொண்டாட் டம் தீம் பார்க் அருகில் செயல்பட்டு வந்த பழமையான பொருட் கள் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்ட னர். இதில், கோவை, வேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயக் குமார் (43) பழமையான நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்களுடன் 1972ம் வருடத்திய வன உயிரினப்பாதுகாப்பு சட்டத்தின்படி வாங்க, விற்க, இருப்பில் வைத்திருக்க தடை செய்யப்பட்ட சிவப்பு நிறப் பவளப் பாறைகளை விற்பனைக்கு கடையில் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து வனசட்டப்பட்டி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
ஆபாச படம் எடுத்த சினிமா இயக்குனர்: காவலில் எடுத்து விசாரணை
சேலம், செப்.10- சேலத்தில் ஆபாச படம் எடுத்த சினிமா இயக்குனரை போலீசார் 6 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், வீரப்பன்பாளை யத்தை சேர்ந்தவர் வேல் சத்ரியன் (38). இவர் சினிமா படம் எடுப்பதாகக்கூறி பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட தாகவும், அவர்களை ஆபாசமாக படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதைய டுத்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து வேல் சத்ரியன், அவரது உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறை யில் அடைத்தனர். இதையடுத்து அவர்களது அலுவல கத்தில் சோதனை செய்தபோது கணினி, பென்டிரைவ், ஹார்டுடிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இளம் பெண்களின் அரை நிர்வாண படங்கள் உட்பட பல ஆபாச படங்கள் இருந்தன. இந்நிலையில், சிறையில் உள்ள வேல் சத்ரியனின் பெண் உதவியாளர் ஜெய ஜோதியை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டனர். இதில் தனக்கும் வேல் சத்ரியனுக் கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? யாரிட மெல்லாம் அவர் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என் பது குறித்தும் கூறியுள்ளார். உதவியா ளரின் விசாரணையில் கிடைத்த தகவ லின் அடிப்படையில் இயக்குநர் சத்திரி யனை 6 போலீஸ் காவலில் எடுத்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது
கோவை, செப்.10- கோவையில் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்து, கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து (மார்பிங்) அனுப்பியவரை காவல் துறையினர் கைது செய்த னர். கோவையை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஒருவர் வாட்ஸ் அப்பில் அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தார். அதனை அந்த மாணவி கண்டுகொள்ள வில்லை. இதனிடையே அந்த நபர் அந்த மாணவியின் செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தன்னை காதலிக்கும் படி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, உன்னை யார் என்றே எனக்கு தெரியாது? பின்னர் எப்படி உன்னை காதலிக்க முடியும் என்று கேட்டுள்ளார். அதன்பின், அவர் தொடர்பு கொண்டால் அதை அந்த மாணவி எடுத்து பேசு வதும் இல்லை. அவர் அனுப்பும் மெசேஜை பார்ப்பதும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நபர் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து (மார் பிங்) வாட்ஸ் அப்புக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது பெற் றோரிடம் தெரிவித்து, கோவை மாநகர குற்ற புலனாய்வு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் அருண் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில். அந்த மாணவி யின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியது வட வள்ளியை சேர்ந்த மனோஜ்குமார் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் மனோஜ்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் செல்போன் கடை நடத்தி வருவதும், அந்த மாணவி தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்து அவருடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவருக்கும், அந்த மாணவி யின் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மனோஜ்குமாரை சிறையில் அடைக்கப் பட்டார்.