districts

img

பாலர் பூங்காவில் கோடை முகாம்

சேலம், ஜூன் 3- சேலம் வடக்கு மாநகரில் பாலர் பூங்கா சேலம் வடக்கு மாநகர் சார்பில் கோடை முகாம் கண்ணங்குறிச்சி பகு தியில் நடைபெற்றது. சேலம் வடக்கு மாநகரில் பாலர் பூங் காவின் வடக்கு மாநகர கோடை முகாம்  ஒருங்கிணைப்பாளர் எம்.கற்பகம் தலை மையில் கன்னங்குறிச்சி தோட்டத்தில்  நடைபெற்றது.  இம்முகாமில் ஸ்ரீஹ ரிணி, பாலர் சங்க செயலாளர் வரவேற் றார்.  இந்நிகழ்ச்சியில் அறிமுகம்,  கூடிவி ளையாடுவோம்,  கூட்டம் நடத்துவோம்,  வினாடி வினா, மரம் நடுவோம், சேர்ந்து பாடுவோம், காகிதகலை, அறிவியல் சோதனைகள், மந்திரமா? தந்திரமா?,  கதைகள் கேட்போம், மாதிரி கூட் டம், அனுபவ பகிர்வு போன்ற நிகழ்வுக ளில் கருத்தாளர்களாக திருப்பூர் பாலர் பூங்கா ஒருங்கினைப்பாளர்கள் சந்துரு, முகிலன் ஆகியோர் பங்கேற்றனர். மாநில ஒருங்கிணைப்புக்குழு கே. ஜோதிலட்சுமி நிறைவுரை நிகழ்த்தி னார்.  இதில், வடக்கு மாநகர ஒருங்கி ணைப்பு குழுவினர் எ.கௌசல்யா, ஆர். புருஷோத்தமன்,  கே. கல்யாணசுந்த ரம், வி.சரவணன் ஆகியோர் பங்கேற்ற தோடு, சிபிஎம் மாநகரச் செயலாளர் என். பிரவீன்குமார் மாநகரக்குழு உறுப்பி னர்கள் வி.வெங்கடேஷ், பி.ராஜேஷ்கு மார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் பங்கேற்றனர். முகாமிற்குபின் பாலஸ்தீனத்தில் “இஸ்ரேல்” அத்துமீறி நடத்தும் இனப் படுகொலையையும், அப்பாவி குழந் தைகளை கொன்று குவிக்கும் படு பாதக செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிடப்பட்டது.

;