districts

img

ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 10– சத்துணவு அங்கன்வாடி திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியுடன் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு அங்கன்வாடி திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் கூடிய ரூ.6750 மாதாந்திர சிறப்பு ஓய் வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளன்றே எஸ்பிஎப், எப்பிஎப், ஜிபிஎப் ஆகிய பணப்பலன்களை வழங்க வேண்டும். ஈமக்கிரியை செல வினம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சத் துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதி யர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதன்ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்ட தலைவர் கு.வடிவேல் தலைமை ஏற்றார். இதில், சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட செயலாளர் நடராஜன், கே.ராஜவேலு, செஞ்சு லட்சுமி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமை ஏற்றார். இதில், திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 15 ஒன்றி யங்களில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன. மாநில துணைத்தலைவர் மணி மேகலை, மாவட்ட தலைவர் ராதாமணி, மாவட்ட செயலாளர் சாந்தி ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பெருந் திரளான அங்கன்வாடி ஊழியர்கள் மற் றும் உதவியாளர்கள் கலந்து கொண்ட னர்.

தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் இ.சண்முகம் தலைமை வகித் தார். மாநில துணைத்தலைவர் இ. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பி.சுப்பிரமணியன், மாவட்ட பொருளா ளர் மதலைமுத்து, முன்னாள் மாநில துணைத்தலைவர் எம்.கணேசன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். இதில், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.காவேரி, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க  மாநில துணைத்தலைவர் கே.குப்பு சாமி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.பெரு மாள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் ஒட்டமெத்தை பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டார ஒன்றிய தலைவர் மா.விஜயா தலைமை வகித்தார். ஒன்றிய செயலா ளர் அம்பிகா, பொருளாளர் மகேஸ்வரி உட்பட் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

;