இளம்பி4ள்ளை, டிச.10- இடங்கணசாலை அருகே அரசுப் பள்ளியில் அழுகிய சத்து ணவு முட்டைகள் விநியோகிக்கப் பட்டதால் ஆசிரியர்கள், பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகேயுள்ள இடங்கண சாலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் அர சினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. இப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரு கின்றனர். இப்பள்ளியில் சத் துணவுத் திட்டத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று மதியம் வழங்க இருந்த சத்து ணவு முட்டைகள் கெட்டு அழுகிய நிலையில் புழுக்கள் நிறைந்து காணப்பட்டது. இதைக் கண்டு சத்து ணவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பள்ளி யின் தலைமை ஆசிரியரிடம் தெரி வித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து நடவ டிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்பின்னர் அழுகிய முட்டைகளை குழிதோண்டி மண்ணில் புதைத் தனர். மேலும், புழுக்கள் இருந்த முட்டையின் அட்டைகளை தீயிட்டு எரித்து அப்புறப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே, மகுடஞ்சாவடி வட்டாரத்தில் உள்ள மேலும் சில பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் சத்துணவு உயர் அதிகா ரிகள் உரிய விசாரணை செய்து பள்ளி மாணவர்கள் சாப்பிடும் முட் டைகளை அழுகிய மற்றும் கெட்டுப் போன நிலையில் விநியோகம் செய்தவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண் டும். இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என பெற் றோர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.