அவிநாசி, செப். 9 - அவிநாசி அருகே பழங்கரை ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்கக் கேட்டுக் அப்பகுதி மக்கள் திங்கள் கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் மாவட்டம், பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஆயிக்கவுண்டம்பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத் திற்கும் மேலாக குடிநீர் வழங்கபடவில்லை. இதுகுறித்து பலமுறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக் காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களு டன் மலையப்பாளையம் அவிநாசி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் பேச் சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்ப டும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.