districts

வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவிகிதம் வரி விதிப்பு

திருப்பூர், ஆக.25 - ஒன்றிய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவிகித வரி விதித்திருப்பதற்கு விவ சாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், வர்த்தகப் பட்டியலில் சின்ன வெங் காயத்திற்கு தனியாக ஏற்றுமதி எண் உரு வாக்க வலியுறுத்தி உள்ளனர். ஒன்றிய அரசு கடந்த கடந்த 16ஆம் தேதி யன்று இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப் படும் வெங்காயத்திற்கு  40 சதவிகிதம் வரி விதித்து உள்ளது. இதனால், வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உள் நாட்டு சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு, கடும் இழப்பை சந்திப்பார்கள்.  பெரிய வெங்காயம் என்பது இந்திய அள விலான பிரச்சனை, ஆனால் சின்ன வெங் காயம் என்பது தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரிய லூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட் டங்களில் மட்டுமே விளைவிக்கக்கூடியது, தமிழர்கள் வாழ்ந்து வரும் வெளிநாடு களுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்று மதி செய்யப்பட்டு வருகிறது, ஆனால், ஒன்றிய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து ஒவ்வொரு முறையும் தடை களை விதித்தும், வரிகளை விதித்தும் தமிழ் நாட்டு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்றுமதி வர்த்தகத்துக்கு சின்ன வெங் காயம், பெரிய வெங்காயம் இரண்டிற்கும் ஒரே எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைப் பிரித்து சின்ன வெங்காயத்திற்கு தனி  எண்ணை உருவாக்க வேண்டும் என  தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும், இது வரை இக்கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை. சின்ன வெங்காயத்திற்கு கிலோ ஒன் றிற்கு உற்பத்தி செலவு குறைந்தபட்சம் 30  ரூபாயாக இருந்து வருகிறது, குறைந்த பட்ச லாபத்தோடு சேர்த்து கிலோ ரூ.45க்கு விற்றால் மட்டுமே கட்டுபடியாகும். தற் போது கட்டுப்படியான விலை கிடைத்து வந்த நிலையில், இந்திய அரசின் 40 சதவீதம்  வரி விதிப்பு கிலோவுக்கு 20 ரூபாயை குறைத் துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிர் செய்து வந்த மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் பாதிப்பிற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர். நஷ்ட மும் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் மிக  மோசமான நிலையை கருத்தில் கொள் ளாமல், நுகர்வோர்களை மட்டுமே கருத் தில் கொண்டு, தேர்தல் அரசியலை மனதில்  வைத்து இது போன்ற செயல்களை ஒன்றிய  அரசு செய்துள்ளது என விவசாயிகள் பாது காப்பு சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.