திருப்பூர், டிச.15- திருப்பூரில் தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதிகளை இணைக்கக் கூடிய ரயில்வே மேம்பாலத்தை மாநில பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வெள்ளியன்று திறந்து வைத்தார். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு சட்ட மன்றத் தொகுதிகளை இணைக்கக்கூ டிய வகையில் புஷ்பா ரவுண்டானா அருகே ஒரே ஒரு மேம்பாலம் மட்டும் இருந்து வந்தது. இதனால், போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இத னைக் கருத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு 524 மீட்டர் தூரத்திற்கு ஊத்துக்குளி சாலை எஸ்.ஆர்.சி மில்லில் இருந்து வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட் பட்ட கோல்டன் நகர் வரை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட் டது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் திட்ட அறிக்கை மாற்றப்பட்டதன் காரண மாக பணி காலதாமதமானது. இந்நிலையில், பாலப் பணிகள் முடிக்கப்பட்டு வெள்ளியன்று திறப்பு விழா நடைபெற்றது. இதை மாநில பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பாலத்தை திறந்து வைத் தார். இந்த நிகழ்வில், மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்கு மார், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வ ராஜ், மாவட்ட ஆட்சியர் தா. கிறுஸ்து ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.