districts

3 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

கோவை, ஜூன் 11- தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் ஆகி விட்டதால் 3 மாதங்களுக்கு பிறகு நீல கிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி  வாக்குப்பதிவு முடிந்து, ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது.  இதையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம்  தேதியிலிருந்து கடந்த 6 ஆம் தேதி வரை தேர் தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந் தன.  இதன்படி அனைத்து அரசு துறைகளும்  தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அதேபோல் மாவட்ட நிர்வாகம் சார் பில் செய்யப்பட்டு வந்த ஒரு சில சிறப்பு  ஏற்பாடு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கூட தேர்தல்  ஆணையத்திடம் அனுமதி வாங்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள  நீலகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் தற்காலி கமாக நிறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் தாங்கள் கொண்டுவரும் மனுக்களை இது வரை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில்  இருந்த பெட்டியில் போட்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்து விட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை முதல்  வழக்கம்போல் ஒவ்வொரு வாரமும் பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என் றும் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம் என் றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந் தது. 

இதன்படி, திங்களன்று உதகை ஆட்சி யர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட  ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்தார்.  3 மாதங்களுக்கு பிறகு நடந்த கூட்டம் என்ப தால் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து நீண்ட வரிசையில் காத்தி ருந்து தங்களது மனுக்களை கொடுத்தனர். மேலும், தங்களது பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அதிகா ரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். முதல் நாளில் திங்களன்று மட்டும் 140  மனுக்கள் வந் திருந்தன.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலநிதியி லிருந்து 4 நபர்களுக்கு ரூ.62,000-க்கு, பல் வேறு நிதியுதவி பெறுவதற்கான அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலு வலர் கீர்த்தி பிரியதர்சினி, தனித்துணை ஆட் சியர் கல்பனா, கூடுதல் நேர்முக உதவியாளர்  தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்ட னர்.