districts

img

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரணம் வழங்கல்

நாமக்கல், செப்.4- சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்க ளின் வாரிசுதாரர்களுக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியினை நாமக்கல் ஆட்சி யர் துர்காமூர்த்தி வழங்கினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரி ழந்தவர்களின் வாரிசுதார்கள் மற்றும் காய மடைந்தவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி புத னன்று ஆட்சியரகத்தில் நடைபெற்றது. அதன் படி, செம்பாம்பாளையம் கிராமத்தில் வசிக் கும் சண்முகம், மனைவி ராஜலட்சுமி ஆகி யோர் கடந்த மே 22 ஆம் தேதியன்று ஏற்பட்ட  சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதைய டுத்து அவர்களின் வாரிசுதார்களான சண்மு கம் அவர்களின் தாய் தமிழ்மணி, மகள்கள் ராஜேஸ்வரி, செல்வி வசந்த பிரியா மற்றும்  மகன் செல்வன் ஹரி பிரசாத் ஆகியோ ருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி யிலிருந்து ரூ.6 லட்சம் மற்றும் காயமடைந்த  ராஜேஸ்வரிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ் வில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தனித் துணை ஆட்சியர் ச.பிரபாகரன் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண் டனர்.