districts

img

சாலையோரம் சட்டவிரோதமாக சிம்கார்டு விற்பனை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

நாமக்கல் மே 29-  சாலையோரங்களில் சட்டவிரோத மாக சிம்கார்டு விற்பனையில் ஈடுபடு பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர்  சங்கத்தினர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் சிம் கார்டுகள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணி கர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட  தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், செல்போன் சேல்ஸ் மற்றும் சர்வீஸ்  அசோசியேசன் மாவட்ட தலைவர் ராயல் பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள்,  நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராஜேஸ் கண்ணனை நேரில் சந் தித்து மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, நாமக்கல் பரமத்திவேலூர், சேந்தமங்க லம், எருமப்பட்டி போன்ற பகுதிகளில் சிம்கார்டுகளை சாலையோரங்களில் விற்பனை செய்கிறார்கள். இந்திய  தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) விதிமுறைப் படி, சில்லரை விற்பனையாளர்களே அப்பகுதிகளில் சிம்கார்டுகளை விற் பனை செய்ய வேண்டும். அப்பகுதிக ளில் சிம்கார்டுகளை விற்பனை செய்ய  அங்கீகரிக்கப்படாதவர்களால் சாலை ஓரங்களில் தற்காலிக கடைகள் மற்றும் குடைகள் அமைத்து விற்கப்படும் சிம் கார்டுகளால் வாடிக்கையாளர்களின் ஆதார் அடையாள அட்டையை முறைகேடாக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது.  மேலும், இது போன்ற முறையற்ற  விற்பனையால் இப்பகுதியில் இருக் கும் சிறு, குறு வணிகர்களின் வாழ்வா தாரமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. ஆகவே, இதுபோன்று சட்டத்தை மீறி  சாலையோரங்களில் சிம்கார்டு விற் பனை செய்பவர்களின் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க  வேண்டும். சாலையோர சிம் கார்டு விற் பனைக்கு தடை விதிக்க வேண்டும் என  கேட்டுக் கொள்கிறோம் என அம்மனு வில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், நாமக்கல் மொபைல் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் அசோ சியேசன் மாவட்டச் செயலாளர் ராக வன், நகரச் செயலாளர் எவரெஸ்ட் ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் கதிர வன், மனோஜ் குமார் உள்ளிட்ட பலர் உட னிருந்தனர்.

;