நாமக்கல், ஆக.23- வாடிக்கையாளரை ஏமாற்ற முயன்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், சித்தாபுதூ ரைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அவரது வீட் டுக்கு பாரதி ஏர்டெல் தனியார் நிறுவ னத்தின் தரைவழி தொலைபேசி இணைப்பை (land line connection) பெற்று உபயோகித்து வந்துள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத் திற்கான கட்டணமாக ரூ.1,882யை வங்கி மூலமாக செலுத்தியுள்ளார். ஆனால், கட்டணத்தை செலுத்த வில்லை என தொலை தொடர்பு நிறு வனம் கூறியதை தொடர்ந்து, பணம் செலுத்தப்பட்ட விவரங்களுடன், அந்த நிறுவனத்திற்கு அவர் மின் னஞ்சல் அனுப்பியுள்ளார். இருப்பி னும் ஜூன் மாத பணம் செலுத்தப் படவில்லை என தொலை தொடர்பு நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் அடிக் கடி வீட்டுக்கு வந்து பணத்தை செலுத் துமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பாலசுந்தரம் 10 வருடங்க ளாக உபயோகித்து வந்த தொலை பேசி இணைப்பை துண்டித்து விடு மாறு தொலை தொடர்பு நிறுவனத்தை கேட்டுள்ளார். ஆனால், தனியார் நிறு வனம் இணைப்பை துண்டிக்காமல் ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீதை அனுப்பி வந்துள்ளது. இதனால் மன உளைச்சலடைந்த பாலசுந்தரம், கடந்த 2018 ஆம் ஆண்டு கோவை மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய் தார். இந்த வழக்கு விரைவான விசார ணைக்காக 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாமக்கல் நுகர்வோர் நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொலை பேசி கட்டணங்கள் குறித்த பிரச்சனை கள் உட்பட்ட தொலை தொடர்பு தக ராறுகளை விசாரணை செய்ய நுகர் வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளதால், வழக்கை தள்ளு படி செய்ய வேண்டும் என்று தொலை தொடர்பு நிறுவனம் இந்த வழக்கில் தாக்கல் செய்த பதிலில் தெரிவித் திருந்தது. இந்நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி வீ.ராமராஜ், உறுப் பினர் ரத்னசாமி ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தொலை தொடர்பு பிரச்சனைகளை மத்தியஸ்த நடுவர்தான் விசாரிக்க முடியும் என்றும், நுகர்வோர் நீதிமன் றங்களுக்கு இப்பிரச்சனைகளை விசா ரிக்க அதிகாரம் இல்லை என்றும் கூறி யது உண்மை. இதனால் கடந்த 12 ஆண்டுகளாக தொலைபேசி மற்றும் இணையதள சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க நுகர்வோர்
நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய இயலவில்லை. ஆனால், 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பில், தொலை தொடர்பு சேவைகளில் ஏற்படும் பிரச்சனை களை தொலைத்தொடர்பு நிறுவ னங்களும், வாடிக்கையாளர்களும் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தப் படி மத்தியஸ்த நடுவரிடம்தான் தீர்த் துக் கொள்ள வேண்டும் என்பது கட் டாயமானதல்ல என்றும், விரும்பி னால் நுகர்வோர் நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துவிட்டது. இவ்வழக்கில் செலுத்திய பணத்தை மீண்டும் கேட்டு பாலசுந்த ரத்தை தொல்லை செய்ததும், தொலை பேசி இணைப்பை துண்டிக்க கேட் டுக் கொண்டும் அதனை துண்டிக்கா மல் மாதந்தோறும் கட்டண ரசீது அனுப்பியதும், தொலை தொடர்பு நிறுவனத்தின் சேவை குறைபாடு. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கை யாளருக்கு தொலை தொடர்பு நிறுவ னம் ரூ.25 ஆயிரத்தை இழப்பீடாக வும், ரூ.5 ஆயிரத்தை வழக்கு செலவு தொகையாகவும் நான்கு வாரங்க ளுக்குள் வழங்க வேண்டும். தவறி னால் ஆண்டொன்று 9 சதவிகித வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள கோடிக் கணக்கான தொலைபேசி, அலை பேசி மற்றும் இணையதள சேவை களை பெறும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண் டிய தீர்ப்பாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது என்று பலர் கருத்து தெரி வித்துள்ளனர்.