districts

img

சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு

ஈரோடு, பிப். 9- ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள் ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணி கள் குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் ஆய்வு செய்தனர். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பி னர் க.அன்பழகன் தலைமையிலான சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவினர்  வெள்ளியன்று ஈரோடு மாவட்டம்  வருகை தந்தனர். இக்குழுவினர் சித் தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்ப டும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த னர்.  மேலும் மருந்துகள் இருப்பு குறித்து  மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து பவானி வட்டம், கவுந்தப் பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களை ஆய்வு மேற் கொண்டனர்.  அப்போது விரைந்து பணி களை முடிக்க அறிவுறுத்தினர்.  தொடர்ந்து ஜம்பை, மேட்டுநாசுவம்பா ளையம் பகுதியில் நடைபெறும் பணி களை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, காட்டுமன்னார்  கோவில் எம்எல்ஏ ம.சிந்தனை செல்வன், மயிலம் எம்எல்ஏ ச.சிவகு மார், ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அடங்கிய குழுவினர் உடனிருந்தனர்.