உதகை, மே 6- யானைகள்வழித்தட விரிவாக் கம் குறித்து வனத்துறையினர் வெளி யிட்ட உத்தரவை அரசு திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து கட்சிகள் சார் பில் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். யானைவழித்தட விரிவாக்க நடவ டிக்கை எதிர்ப்புக் குழு சார்பில் திமுக கூடலூர் நகரச் செயலாளர் இளஞ்செ ழியன், கோபிநாத் (காங்கிரஸ்), என். வாசு (சிபிஎம்), சகாதேவன் (விசிக), கே.ஹனீபா (முஸ்லீம் லீக்) உள்ளிட்ட பலர் யானைகள் வழித்தட பிரச்சினை குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, நீல கிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பே ரவைத் தொகுதியில் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை ஆட்சியாளர்களின் நடவடிக்கை யால் பாதிப்புக்குள்ளாகி வருகி றது. இந்நிலையில், நீலகிரி மாவட் டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகு தியில் புதியதாக அறிவிக்கப்பட் டுள்ள யானைகள் வழித்தட விரிவாக் கம் கூடலூர், ஓவேலி முதுமலை ஆகிய வனத்துறை சரக அலுவல கங்களுக்கு உட்பட்ட 31 கிராமங்க ளில் உள்ள 2547 வீடுகள், இந்த அறி விப்பால் பாதிக்கும் அபாயம் உள் ளது. மேலும் 7 வருவாய்கிராமங்க ளில் 34 ஆயிரத்து 796 வீடுகள், யானை வழித்தடத்தில் உள்ளதாக கண்டறி யப்பட்டுள்ளது. இதில், 2547 வீடுகள் ஒவேலி பேரூராட்சியில் உள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். நெலாக்கோட்டை, சேரங்கோடு, நெல்லியாளம் நகராட்சி பகுதி, மசின குடி ஆகிய உள்ளாட்சி பகுதிகளில் உள்ள மக்களும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 29 ஆம் தேதியன்று வனத்துறையின ரால் யானைகள் வழித்தட விரிவாக் கம் குறித்து புதியதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்மீது ஏதாவது கருத்து கூறுவது என்றால் 5 ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அறி விக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது. மேலும், ஆங்கிலத்தில் உள்ள இந்த உத்தரவு கூடலூர் சட்டப்பே ரவை தொகுதியில் உள்ள ஆங்கிலம் தெரியாத, மின் இணைப்பு இல் லாத வீடுகளில் குடியிருக்கும் கூலி தொழிலாளர்களுக்கு தெரியவாய்ப் பில்லை. ஆகவே, யாரும் கருத்து கூறியிருக்க வாய்ப்பில்லை. தேர்தல் அறிவித்த காலகட்டத்தில் எந்த அரசு அலுவலகமும் செயல்படாத நிலையில் வனத் துறை அதிகாரிகள் எப்படி இது போன்ற ஒரு உத்தரவை வெளியிட்டு கருத்து கேட்க முடியும் என்பதும் புரிய முடியவில்லை. ஆகவே வனத் துறையினரால் யானை வழித்தடம் விரிவாக்கம் சம்பந்தமான ஏப்ரல் 29 ஆம் தேதியிட்ட உத்தரவை ரத்து செய்து, மக்களின் குழு கருத்து கேட்ட பிறகு தான் அமுலாக்குவது பற்றி முடிவு எடுக்க வேண்டும். வனத் துறையின் இந்த அறிவிப்பால், அனைத்து பொதுமக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர். நம்பிக்கை இழந்த மக்களை பாது காக்க வேண்டிய கடமை தமிழக அர சுக்கு உள்ளது. ஆககே, இந்த யானை கள் வழித்தட விரிவாக்கம் பற்றிய 29 ஆம் தேதியிட்ட வனத்துறையி னர் வெளியிட்ட உத்தரவை அரசு உடனே திரும்ப பெற்று கூடலூர் தொகுதி மக்களை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.