districts

ஆடிட்டருக்காக அழும் மோடி, மணிப்பூருக்காக வருத்தப்படக்கூட இல்லை

திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டி யிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட் பாளருமான ஆ.ராசா, அவிநாசியில் நடை பெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வா கிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது  அவர் பேசுகையில், இன்றைக்கு நாடாளு மன்றத்தில் நடந்திருக்கிற அநாகரிகம் என் வாழ்நாளில் எப்பொழுதும் பார்த்த தில்லை, இன்றைக்கு நாடாளுமன்றத் திற்கு எம்பிக்கள் பல்வேறு கேள்விகள்  பதிலளிப்பதற்கு பிரதமர் மோடி வருவ தில்லை. இப்படி ஒரு பிரதமரை நான்  பார்த்ததே இல்லை. ஜெயலலிதா அம்மை யார் காலத்தில் மறைந்த யாரோ ஒரு ஆடிட் டருக்காக அழுகிற பிரதமர் மோடி, மணிப் பூர் பிரச்சனை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்  சூடு நடைபெற்றதற்கோ அழுகவில்லை.  வறுமை கோட்டிற்கு கீழே உள்ள எண்ணிக் கையை பார்த்தால் நூற்றுக்கு 35 சதவிகி தத்திற்கு கீழே உத்தரப்பிரதேசத்தில். குஜ ராத்தில் 26 சதவிகிதம், கேரளாவில் 11 சதம், தமிழ்நாட்டில் 12 சதம்,  பெரியாரை நேசித்த மண்ணில் வெறும் 11 முதல் 12 சதவீதம், நீங் கள் கோவில் கட்டிய மண்ணில் 35 சதவிகி தம். இப்பொழுது எந்த மாடல் வேண்டும்  என்று நாங்கள் தான் முடிவு செய்வோம்.  எல்லா நபர்களும் மோடி மோசம் என்று தான் கூறுகிறார்கள். ஆனால் பயப்பட செய்கிறார்கள் என்ன காரணம் இடி ரெய்டு. ஒரு மதச்சார்பற்ற ஆட்சியை அமைப்ப தற்கு, காரண கர்த்தாவாக இருப்பவர் நம் முடைய முதல்வர். தமிழ்நாட்டின் முதல மைச்சர் குரலை வலுப்படுத்த நீலகிரி நாடா ளுமன்ற தொகுதியில் என்னை தேர்ந்தெ டுத்து அனுப்புங்கள், என்றார்.  இக்கூட்டத்திற்கு செல்வராஜ் எம்எல்ஏ  தலைமையேற்றார். இதில், செய்தித்துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஒன்றியச் செயலாளர் சிவப்பிரகாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, நகரச் செயலாளர் மூர்த்தி, நீலகிரி நாடா ளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கருணா நிதி, அவிநாசி தொகுதி பொறுப்பாளர் கோகுல், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், காங்கிரஸ் கட்சி லட்சுமணசுவாமி, சிபிஎம் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி, மணிகண்டன், முசிர், சிபிஐ சண்முகம், முத்துசாமி, பொன் னுசாமி, மதிமுக சுப்பிரமணியம், கொம தேக குமார், சீலன், விசிக சண்முகம், ரங்க சாமி, ஆதித்தமிழர் பேரவை விடுதலைச் செல்வன், மமக அபுசாலி, அ.பார்வர்டு பிளாக் தேவராஜ், மக்கள் நீதி மையம் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.