districts

குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரை ரூ.1,912 கோடி செலவில் புதிய 4 வழிச்சாலை

கோவை, செப்.11- கோவை மாவட்டம், குரும்பபாளை யம் முதல் சத்தியமங்கலம் வரை  ரூ.1,912 கோடி செலவில் 4 வழிச்சாலை  அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டு, அதற்காக 315 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. கோவையிலிருந்து சத்தியமங்க லம் மற்றும் திம்பம் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் முக்கிய சாலை யாக சத்திசாலை உள்ளது. இச்சாலை யில் போக்குவரத்து நெரிசல் அதிக ரித்து வருகிறது. இதை தவிர்க்க சாலையை விரிவுபடுத்த திட்டமிடப் பட்டு உள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதி காரிகள் கூறுகையில், கோவையை அடுத்த குரும்பபாளையம் முதல் சத்தி யமங்கலம் வரை 90 கிலோ மீட்டர் தூரம் ரூ.1,912 கோடி செலவில் 4 வழிச்சாலை யாக புறவழிச்சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலையின் அகலம் 60 மீட்டர். மேலும் சர்வீஸ் சாலைகளும் அமைக் கப்படும். தேவைப்படும் இடங்களில் மேம்பாலங்களும் கட்டப்படும். இதில்  திம்பம் வரை அமையும் 90 கிலோ மீட் டர் இடைவெளியில் 2 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும். இந்த சாலையை விரி வாக்கம் செய்ய 315 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட வேண்டும். இதற்காக கோவை மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் நிலம் கையகப்படுத்தி கொடுக்க வேண் டுகோள் விடுக்கப்பட உள்ளது. மேலும், இந்த சாலை அகலப்படுத்துவதற்கான திட்டவரைவு தயாரிக்கும் பணி தற் போது நடைபெற்று வருகிறது. அதே போல் காந்திபுரத்திலிருந்து குரும்ப பாளையம் வரை உள்ள சாலையை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்கப்பட உள் ளது, என்றனர்.

இந்த புறவழிச்சாலையில் 74  பேருந்து நிறுத்தங்கள், 3 டிரக் பே உள் ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட உள் ளன. மேலும், இச்சாலை கோவை மாவட்டத்தில் 26.7 கிலோ மீட்டரும், திருப்பூரில் 3.6 கிலோ மீட்டரும், ஈரோட் டில் 60 கிலோ மீட்டரும் அமைய உள் ளது. மேலும், தற்போதுள்ள கோவை -  சத்தியமங்கலம் சாலையை விரிவாக் கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள் ளப்பட உள்ளன. அதன்படி கோவை  சரவணம்பட்டியில் இருந்து புளியம் பட்டி வரை ரூ.73 கோடியில் சத்தி சாலை விரிவுபடுத்தப்பட உள்ளதாக நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சா லைத்துறை சார்பில் சத்தி சாலையை அகலப்படுத்துவது குறித்து திட்ட மதிப் பீடு அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒன்றிய அரசி டம் சமர்ப்பித்து நிதி உதவி பெற்றுள் ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், சர வணம்பட்டியில் இருந்து அன்னூர் வழி யாக புளியம்பட்டி வரை 32 கிலோ  மீட்டர் தூரத்துக்கு ரூ.73 கோடி செல வில் இருபுறமும் சாலையை அகலப் படுத்த ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் அனுமதி கிடைத்துள் ளது. தற்போது இந்த சாலையின் அக லம் 7 மீட்டராக உள்ளது. அதை 10 மீட்ட ராக அதிகரிக்கப்பட உள்ளது.  இடது பக்கம் 1.5 மீட்டர், வலது பக்கம் 1.5 மீட் டர் என்று 3 மீட்டர் அகலப்படுத்தப்படும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா மல் சாலையை அகலப்படுத்தும் பணி  நடைபெறும். சாலையை அகலப்படுத் துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும், என்றனர்.

விவசாயிகள் எதிர்ப்பு

ஏற்கனவே உள்ள சாலைகளை விரி வாக்கம் செய்து பயன்படுத்தாமல், சுங் கச்சாவடி அமைத்து வசூல் செய்வ தற்கும், பெரும் கார்பரேட் நிறுவனங் கள் வாங்கியுள்ள நிலங்களின் மதிப்பை உயர்த்துவதற்கும்தான் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என் றும். இதனால் சுமார் 800 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படுகிறது. விவசாயி கள், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை யும் மீறி, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப் பளவு விளைநிலங்களை அழித்து  இத் திட்டங்களை  செயல்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் முயற்சி செய்வதை கண்டித்தும், ஏற்கனவே உள்ள சாலை களை தேவையான அளவு விரிவாக்கம் செய்யக்கோரி அன்னூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் தொடர் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக் கது.
 

;