districts

img

நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு விழா சிறப்புற கொண்டாடப்படும்

கோவை, பிப்.6- நாராயணசாமி நாயுடு நூற் றாண்டு விழா சிறப்பாக கொண் டாடப்படும் என மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.  உழவர் பெருந்தலைவர் நாராய ணசாமி நாயுடு பிறந்தநாளை முன் னிட்டு, சர்க்கார் சாமகுளம் ஊராட்சி, வையம்பாளையத்தில் அமைந் துள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு திங்களன்று பல்வேறு அர சியல் கட்சியினர், விவசாய அமைப் புகள், விவசாயிகள் பொதுமக்கள்  நேரில் சென்று மரியாதை செலுத்தி னர். இதன்ஒருபகுதியாக, மின்துறை  அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், நாராயணசாமி நாயுடு வின் கடைசி மகள் பிரபாதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் உடனி ருந்தனர். இந்நிகழ்வில் அமைச்சரி டமும் மாவட்ட ஆட்சியரிடமும் சில  கோரிக்கைகளை குடும்பத்தினர் முன்வைத்தனர்.  இதனைத்தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய அமைச்சர் செந் தில் பாலாஜி, உழவர் பெருந்தலை வர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசின் சார்பில் அவரது  சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தியது பெரு மையாக உள்ளது. இந்த பகுதியில் நாராயணசாமி நாயுடு அவர்களின்  நினைவாக நுழைவு வாயில் அமைக்க வேண்டும், அவர் வாழ்ந்த இல் லத்தை நூலகமாக மாற்ற வேண்டும் என அவரது குடும்பத்தார் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் முதலமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு செல்லப்படும். அவரது நூற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படும், என்றார்.