districts

img

ரேசன் கடையில் காய்கறிகளை விற்பனை செய்திடுக

கோவை, ஜூலை 11- காய்கறிகளின் விலை கடுமை யாக அதிகரித்துள்ளதால், ரேசன் கடைகளில் காய்கறிகளை விற் பனை செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் கழுத்தில் தக்காளி ஆப ரணம் அணிந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று அளித்தனர். இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா கூறு கையில், அத்தியாவசிய சமையல் பொருட்களின் விலைவாசி கடுமை யாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி, வெங்காயம், இஞ்சி, மிள காய், மற்றும் பல்வேறு பொருட்க ளின் விலை 100 ரூபாயை கடந்து,  தற்போது ஒரு கிலோ 200 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப் படுகிறது. இந்த விலையேற்றம் சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது என வியா பாரிகள் கூறுகின்றனர். இந்த மித மிஞ்சிய விலை உயர்வை கட்டுப்படுத்துகிற வகை யில்,  தமிழ்நாடு அரசு விவசாயிகளி டம் நேரடி கொள்முதல் செய்ய  வேண்டும். கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யும் மையங்களை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண் டும். இதனை உடனே செயல்படுத் தும் விதமாக, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகம் நியாய  விலை கடைகள் மற்றும் நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். இதனால்  மக்களுக்கு குறைந்த விலையில், அத்தியாவசிய பொருட்களான காய் கறிகள் மற்றும் இதர பொருட்கள் கிடைக்கும், என்றார்.

இந்த கோரிக்கை மனுவை, மாதர் சங்க கோவை மாவட்ட தலை வர் சி.ஜோதிமணி தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் கோகிலாவிடம் மனு அளித்தனர். முன்னதாக, தக் காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாகவும், உணவுப் பொருட்கள் பாதுகாக்கும் பொரு ளாக மாறிவிட்டது என்பதை  உணர்த் துகிற வகையில், தக்காளியை ஆப ரணம் போல் கழுத்தில் அணிந்திருந் தனர். இதில், மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராஜலட்சுமி, மாவட்ட பொருளாளர் உஷா உட் பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி இதே கோரிக்கைகளை வலியு றுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதாவிடம் மாதர் சங் கத்தினர் மனு அளித்தனர். இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, முன்னாள் மாவட்ட  செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, நகர செயலாளர் எஸ்.நிர்மலாராணி,  மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி, ரங்க நாயகி, மாலா ஆகியோர் உடனி ருந்தனர்.