districts

img

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த ரூ.3,198 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகள்

சேலம், செப்.6- தமிழகத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத் தில் ரூ.3 ஆயிரத்து 198 கோடி மதிப் பீட்டில் நவீன வசதிகள் அமைப்ப தற்கான பணிகள் துவக்கப்பட்டுள் ளதாக தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தமிழக தொழி லாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.விகணேசன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்குப்பின் அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் படிக்கின்ற இளைஞர்களுக்கு 100 விழுக்காடு  வேலைவாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் என்ற உயரிய நோக் கத்துடன் தமிழக அரசு செயல் பட்டு வருகிறது. அந்த வகையில்  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசினர் தொழிற்பயிற்சி நிலை யத்திலும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 35 ஆயிரம் இளைஞர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வருகின்றனர். ஒவ்வொரு  ஆண்டும் சுமார் 25 ஆயிரம் இளை ஞர்கள் முதலாம் ஆண்டு பயிற்சி யில் புதிதாக சேர்ந்து பயின்று வரு கின்றனர். சேலம் அரசினர் தொழிற்பயிற்சி  நிலையத்தில் 41 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பு தற்போது 81 விழுக்காடாக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சராசரியாக 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

மேலும், தனியார் தொழில் நிறுவ னங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக் கத்தோடு இதுவரை 56 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத் தப்பட்டு, அதன்மூலம் 99 ஆயிரத்து  900 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங் களையும் மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கும் தலா ரூ.ஆயிரத்து 196 கோடி வழங்கி, புதிய கட்டிடங்கள் மற்றும் ரோபோ டிக்ஸ், ஆட்டோமேசன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுடன் மேம் பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும். அந்த வகையில் இன்றைய தினம் (செவ்வாயன்று) சேலம் அரசினர்  தொழிற்பயிற்சி நிலைய வளாகத் தில் ரூ.3 ஆயிரத்து 198 கோடி  மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நவீன வசதிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய தொழில்நுட்ப மையம்  (Technology Centre) அமைப் பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக, இந்த ஆய்வின் போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ. வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியர்  செ.கார்மேகம், சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் இரா.இராஜேந் திரன், மாநகராட்சி துணை மேயர்   மா.சாரதாதேவி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.