districts

img

ஊதிய உயர்வு கேட்டு இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன 10 - ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என  வலியுறுத்தி சேலத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்  சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். எல்ஐசி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவையில் உள்ளது. இதுசம்பந்த மாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங் கம் உட்பட பல சங்கங்கள் நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும், இது வரை நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசு பேச்சு வார்த்தை நடத்தி, ஊதிய உயர்வு கோரிக் கையை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்க வில்லை. இந்நிலையில் அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்ஐசி முதல் நிலை  அதிகாரிகள் சங்கம், தேசிய களப்பணியாளர் கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் கூட்டு  போராட்டத்தை அறிவித்தன. நாடு முழுவதும்  உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பாக  ஊழியர்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டத்தின் தலைமை அலுவலக மான சேலம் கோட்ட அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செய லாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் துணைத்தலைவர் தர்மலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றி னார். இதில் முதல் நிலை அதிகாரிகள் சங்க  நிர்வாகிகள் விவேகானந்தன், ரவி, இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க இணைச்செயலாளர் கலி யபெருமாள் உட்பட 100க்கும் மேற்பட்ட ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.