கோவை, செப்.5- அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத் தினை சென்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கிவைத்தார். இதன்தொடர்ச் சியாக கோவையில் தமிழக அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, பி.ஆர்.நடராஜன் எம்.பி., உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம் மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிக ளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங் கும் புதுமைப்பெண் திட்டம் திங்களன்று துவங்கப்பட்டது. கோவை மாவட்டம், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், புதுமைப்பெண் திட் டத்தின் கீழ் முதற்கட்டமாக 199 கல்லூரிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 596 மாணவியர்களுக்கு வழங்கும் விதமாக, 620 மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையினை தமிழக மின் சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் இரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையர் மோ.ஷர்மிளா, தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் வி.கீதாலெட்சுமி, மாவட்ட முன் னோடி வங்கி மேலாளர் கௌசல்யாதேவி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை மற்றும் புதுமைப்பெண் பெட் டக பைகளை வழங்கினார். இதில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்தி பன், மாநகராட்சி மேயர் ஆர்.ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் (சேலம் வடக்கு) இரா.ராஜேந்திரன், (சேலம் மேற்கு) அருள், (மேட்டூர்) எஸ்.சதாசிவம், முன்னாள் அமைச் சர் செல்வகணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலைய ரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதற்கட்ட மாக மாவட்டத்தில் 4 ஆயிரத்து 170 மாணவி களுக்கு வழங்கும் விதமாக 625 மாணவிக ளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உதவித் தொகையை வழங்கினார். இவ்விழாவில் இதில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்க டேஷ்வரன், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், தருமபுரி நகர்மன்ற தலைவர் மா. லட்சுமி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தலை வர் பெ.மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மக ளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளில் முதற்கட்டமான 4 ஆயிரத்து 385 மாணவிகள் தேர்வு செய்யப் பட்டு, அதில் 12 கல்லூரிகளைச் சேர்ந்த 844 மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை தமி ழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன் வழங்கினார். இதில், மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ் குமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி, தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் நா.ராமலட்சுமி, நாமக்கல் நக ராட்சி தலைவர் து.கலாநிதி, துணைத்தலை வர் செ.பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.