சேலம், செப்.18- தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலை பணியா ளர்கள் சங்க அமைப்பு தினம் சேலத்தில் சனியன்று கொண் டாடப்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் உட்கோட்டம், மேச்சேரி நெடுஞ்சாலை பிரிவு அலுவல கத்தில் தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத் தின் 23 ஆவது அமைப்பு தின கொடியேற்று விழா சங்கத்தின் உட்கோட்டத் தலைவர் கே. எம்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற் றது. இதில், சங்கத்தின் கொடியை உட் கோட்ட துணைத்தலைவர் முருகன் ஏற்றி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியை முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் அ.ஈஸ்வரன் ஏற்றி வைத்தார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம் மேளனத்தின் கொடியை செயற்குழு உறுப் பினர் பி.ராஜி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மேச்சேரியில் உள்ள அன்னை தெரசா ஆதரவற்றோர் கருணை இல்லத் திற்கு சென்று அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் பிஸ் கட்டுகள் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட் டது.