districts

img

சட்டமன்ற அரசு உறுதிமொழிக்குழு கோவையில் ஆய்வு

    கோவை, செப். 21- தமிழ்நாடு சட்டமன்ற  அரசு உறுதிமொழிக்குழு வின் தலைவர், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா. உதயசூரியன் தலைமை யில் அனைத்து துறை அலு வலர்களுக்கான ஆய்வு   கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுதி மொழிக்குழு உறுப்பினர்கள், வந்த வாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார், திண்டிவனம் பொ.அர்ஜூனன், சிங்காநல்லூர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் செயலாளர் முனைவர்.கி. சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இணைச்செயலாளர் மு.கருணாநிதி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும்  கோவை மாவட்டத்தில் உள்ள  சட்ட மன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பங் கேற்றனர்.  முன்னதாக இக்குழு பாரதியார் பல் கலைக்கழகத்தில் ரூ.2 கோடி மதிப் பீட்டில் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு மையம்  அமைக்கப் பட்டுள்ளதையும், ரூ.20 கோடி மதிப்பீட் டில் நூலகம் மற்றும் உயிர் அறிவியல் துறைகளுக்கு புதிய கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.  

இதனையடுத்து கோவையில் ரூ. 3.10கோடி மதிப்பீட்டில் மாதிரி  தீயணைப்பு நிலைய கட்டிட கட்டும் பணி யினையும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள 48 படுக் கைகள் கொண்ட பச்சிளம் குழந் தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் மேம் பாலப்பணியினையும், நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் முடிவுறாத பணிகளை விரைவில்  முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினர். இதுகுறித்து சட்டமன்ற உறுதிக்குழு தலைவர் தா.உதயசூரியன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு சம்மந்தப் பட்ட துறை அமைச்சர்கள் உறுதியளித்த பல்வேறு  திட்டங்களின் செயல் பாடுகள் தொடர்பாக அரசு  உறுதிமொழிக்குழு ஆய்வு மேற்கொள்ளும்.  மேலும், திட்டப்பணிகள் உரிய காலத் தில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள  தொகையில் முடிக்கப்பட்டதா? என  இக்குழு ஆய்வு செய்யும். நடை பெற்ற ஆய்வுக்கூட்டத்தில்  மாநகராட்சி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை,   பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட  அரசு துறைகளின் மூலம் உறுதியளிக்கப்பட்ட 219  கேள்விகளின் மீது அரசு உறுதி மொழிக்குழு ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. 59 உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 25 உறுதிமொழிகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. திட்டப்பணிகள் நடை பெற்று வருகிறது. சில பணிகளுக்கு இடம் தேர்வு செய்தல் உள்ளிட்ட 135  உறுதிமொழிகள் நிலுவையில்  உள்ளது  என்றார்.

;