districts

img

அடிப்படை வசதிகளை நிறைவேற்றுக

தருமபுரி, செப்.23- அரூர் அருகே உள்ள அம்பேத்கர்  நகர் பகுதியின் மக்களுக்கு  அடிப் படை வசதிகள் நிறைவேற்ற வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தீர்த்தமலை மெயின் சாலை பேருந்து நிறுத்தம் முதல் அரூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதை செப்பனிட வேண்டும். அரூர்  அம்பேத்கார் நகர் 5, 6, 7  வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஒகேனக்கல் குடிநீர்,  சாலை, கழிவு நீர் வாய்க்கால், தெரு விளக்கு உள்ளிட்ட வசதி ஏற்படுத்த வேண்டும்.  தீர்த்தமலை பகுதியில் முறை யான கழிவு வாய்கால் வசதி இல்லாத தால் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதி கழிவு நீர் வாய்க்கால் வசதி  ஏற்படுத்த வேண்டும்.  மேலும், ஆதிதிராவிடர் மக்கள்  அதிகளவில் வசித்து வரும் பகுதி யாகும். இப்பகுதி மக்கள் உடல் நலம்  சரியில்லை என்றால் மருத்துவம் பார்ப்பதற்கு பல கிலோமீட்டர் தூரம்  நடந்து செல்லும் நிலையுள்ளது. இதனால் கர்ப்பிணி, மூதியோர்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகு கின்றனர். எனவே இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த  வேண்டும்.

அரூர் அம்பேத்கார் நகரில் மின் சார தகனமேடை அமைக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள நரசனேரி ஏரி அருகில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை மீட்டு நீர்நிலையை பாது காக்க வேண்டும். பட்டு வளர்ச்சித் துறைக்கு சொந்தமான 15.5 ஏக்கர் நிலம் 40 ஆண்டு காலம் எந்தவித பயன்பாடும் இல்லாத நிலையில், இப்பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும்.  நாசன் கொட்டாய் குடியிருப்பு பகுதிகளில் சமுதாயக்கூடம் கட்டு வதற்கு இடம் ஒதுக்கீடு செய்துள்ள இடத்தில் சமுதாயக்கூடம் அமைக்க  வேண்டும். நாசன் கொட்டாய் மற்றும்  அம்பேத்கார் நகரில் பல ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு  வீடு பழுதடைந்துள்ளது. பழுத டைந்த வீடுகளை சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.கோபால், ஆர்.சிவகிரி ஆகியோர்  தலைமை வகித்தனர். தருமபுரி  மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ. அருச்சுணன், எஸ்.கே.கோவிந்தன், பி.வி.மாது, சி.பழனி, எம்.தனலட் சுமி, டி.ஜடையாண்டி, வி.ஜெய காந்தன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். விவசாய‌ தொழிலாளர்‌ சங்க மாவட்ட பொரு ளாளர் இ.கே.முருகன், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் நவகவி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

;