மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளர் ஆர்.வெங்கிடு அவர்களின் மனைவியும், முன்னாள் கோவை மாவட்டச் செயலாளர் வி. ராமமூர்த்தியின் தாயாருமான வி. கருப்பாத்தாள் (94), கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார். அவர்களது படத்திறப்பு விழா, கோவை உடையாம்பாளையம் பகுதியில் உள்ள இல்லத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெரு மாள், கே.காமராஜ், கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ யு.கே.வெள்ளிங்கிரி, ஈரோடு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. மாரிமுத்து உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.