உடுமலை, ஜூன் 13- ஆலாம்பாளையம் பூசாரி நாயக்கர் குளத்திற்கு திருமூர்த்தி அணை யில் இருந்து முறையாக தண்ணீரை திறந்துவிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை தாலுகா, ஆலாம் பாளையத்தில் ஆயிரக்கணக்காண விளைநிலங்கள் பயன்படும் வகை யிலும் இப்பகுதி சுற்றுவட்டார கிரா மங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில் திருமூர்த்தி அணையில் இருந்து பூசாரி நாயக் கர் குளத்திற்கு வருடம் இரண்டு முறை தண்ணீர் விடுவது நடைமுறை யாக இருந்து வருகிறது. இந்நிலை யில், திருமூர்த்தி அணைக்கு பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து வரும் தண்ணீரில் காண்டூர் கால்வாய் வேலைகள் நடைபெற்றதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை யில்லாத காரணத்தால், அணை யின் நீர் குறைவாக இருந்த காரணத் தால் இக்குளத்திற்கு தண்ணீர் விட வில்லை. ஆனால் காண்டூர் கால் வாய் வேலைகள் முடித்து தண்ணீர் போதிய அளவு வரும் நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கு இரண்டு சுற்றுக்கும் மேல் தண்ணீர் தரப்பட்ட நிலையில் பிற குளங்க ளுக்கு தண்ணீர் தரப்பட்ட நிலையில் பூசாரி நாயக்கர் குளத்திற்கு மட்டும் தண்ணீர் விடவில்லை.
இதுகுறித்து அப்பகுதி விவா சாயிகள் கூறுகையில், பூசாரி நாயக் கர் குளத்திற்கு திருமூர்த்தி அணை யில் இருந்து தண்ணீர் திறக்க பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தபோதும் தண்ணீர் விடப்பட வில்லை. குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய்களில் வேலை நடப்பதாக இல்லாத காரணத்தை அதிகாரிகள் சொல்லி வருகிறார்கள். குளத்தில் தண்ணீர் இல்லாமல் போனதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் கிணறுகள் மற் றும் ஆழ்குழாய் கிணறுகளில் தண் ணீர் இல்லாமல் போயுள்ளது. கால்ந டைகளுக்கு தண்ணீர் விலைக்கு வாங்கும் நிலை தான் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கள் குளத்திற்கு வழங்க வேண் டிய தண்ணீரை தர வேண்டும், என்ற னர்.