districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம்  கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

நாமக்கல், செப்.24- நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலங் களை கையகப்படுத்தக் கூடாது என சனியன்று நடைபெற்ற  கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் ஆட்சியரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, அரூர், பரளி, என். புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய ஐந்து கிராமங்களை உள்ள டக்கி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவ டிக்கை எடுத்து வருகிறது.சிப்காட் அமைந்தால் விவசாய  நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என அங்குள்ள மக்கள்  எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல்  கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனியன்று சிப்காட் தொடர் பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர்  ச.உமா அறிவித்தார். அதன்படி, சனியன்று கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஐந்து கிராம விவசாயிகளையும், ஒவ்வொரு கிராம வாரியாக அழைத்து ஆட்சியர் கருத்துகளைக் கேட்டார்.  இதற்கிடையே, என்.புதுப்பட்டியில் இருந்து வந்த பொது மக்கள் சிலர் சிப்காட் அமைக்க வேண்டும் என ஆட்சியரிடம்  முறையிட்டனர். இதனால் ஆதரவு, எதிர்ப்புக் குழுவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு, ஆதரவு தெரி விப்போரிடம் ஆட்சியர் மனுக்களைப் பெற்றார். பின்னர்,  எதிர்ப்புத் தெரிவிப்போரிடம் அவர்களுடைய கருத்துகளைக்  கேட்டறிந்தார். கூட்ட நிறைவில், இருதரப்பு கருத்துகள், கோரிக்கை மனுக்களை தமிழக அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப் படும். அதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

மஞ்சள் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம், செப்.24- சேலத்தில் மஞ்சள் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. சேலம் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியுடன் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம், அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய மன்றம் உதவி யுடன் “மஞ்சள் வளர்ப்பு, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப் படுத்துதலை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் ஒரு நாள்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீசாரதா கல்லூரி  முதல்வர் ஆர்.உமாராணி தலைமை வகித்தார். இதில் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் முல்லைமாறன் கலந்து கொண்டு, நவீன தொழில்நுட்ப முறையில் மஞ்சள் பயிரிடுதல் குறித்து ஆலோசனை வழங் கினார். இதன்பின் பாரம்பரிய முறையில் மஞ்சள் பயிரிடுதல் பற்றியும், ரசாயனமற்ற முறையில் மஞ்சள் பயிரிடுதலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அண்ணா மலை பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் ஆனந்தகுமார், உதவி பேராசிரியர் இலக்கியா ஆகியோர், மஞ்சளின் மருத்துவ குணம் பற்றியும், புற்றுநோய்க்கு தீர்வாக மஞ்சள்  பயன்படுத்துவது பற்றியும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சி யில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன டைந்தனர்.

இளைஞர் கழுத்து அறுத்து படுகொலை

நாமக்கல், செப்.24- நாமக்கல்லில் ரயில்வே தண்டவாளம் அருகே இளைஞர்  கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள  எஸ்.பி.பி. காலனி பகுதியில் அரசு விருந்தினர் மாளிகை  பின்புறம் பாலக்காடு பகுதியில் ஒரு இளைஞர் படுகொலை  செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், பள்ளி பாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.  சென்னை-கோவை செல்லும் ரயில்வே இருப்பு பாலம் அருகில், இளைஞர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் சம்பவ இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டதில், சுமார் 500 மீட்டர்  தூரத்தில் ரயில்வே இருப்புப் பாதை பகுதியில் ரத்த கறைகள்  இருந்ததும், அந்த இடத்தில் இருந்து உடலை இழுத்து வந்து  தற்போது சடலம் இருந்த பகுதியில் வீசப்பட்டிருப்பது தெரிய  வந்தது.  இதையடுத்து, சம்பவ இடத்தில் கொலைக்கான காரணம்  குறித்த திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப் பாளர் இமயவரம்பன் தலைமையில் விசாரணை மேற் கொண்டனர். பின்னர் கொலையான இளைஞர் உடலை  சோதனை செய்த பொழுது அவரது சட்டை பையில் இருந்த  ஆதார் அட்டையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரிய வந்தது.இதனையடுத்து, போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து,  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிறந்த சுற்றுச்சூழல் கட்டமைப்பு விருது கோவை மாநகராட்சி தேர்வு

கோவை, செப்.24- ஒன்றிய அரசின் பொலிவுறு நகர திட் டத்தின்கீழ் சிறந்த சுற்றுச்சூழல் கட்டமைப்புப்  பிரிவு விருதுக்கு கோவை மாநகராட்சி தேர் வாகியுள்ளது. ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும்  நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்ச கத்தின் பொலிவுறு நகர திட்ட இயக்குநரால், பொலிவுறு நகர திட்ட விருதுகள் சனியன்று  அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த சுற்றுச்சூழல் கட்ட மைப்புப் பிரிவில் கோவை மாநகராட்சி தேர்வாகியுள்ளது. ஆர்.எஸ்.புரம், பந்தய சாலை பகுதிகளில் மாதிரிச் சாலைகள் அமைத்தல், உக்கடம் பெரியகுளம், வாலாங் குளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம்  உள்ளிட்ட பல்வேறு குளங்கள் புனரமைப்பு  மற்றும் மேம்பாடு உள்ளிட்டப் பணிகளுக் காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்திய அளவில் 52 நகரங்களில் இருந்து  88 முன்மொழிவுகள் இந்த விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், திட்ட செயல் பாட்டில் சிறந்த பொலிவுறு நகரங்களுக் கான விருது பிரிவில் தெற்கு மண்டலத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பெற் றுள்ளது.

ரேசனில் குறைந்த அளவில் பொருட்கள் விநியோகம்

நாமக்கல், செப்.24- ரேசனின் பொருட்கள் குறைவாக கொடுப் பதாக கூறி பொதுமக்கள் மறியல் போராட் டத்தில் ஈடுபட முயன்றனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள காவேரி ஆர். எஸ், வஉசி நகர் பகுதியில் உள்ள நியாயவிலை கடை யில் சுமார் 1200 குடும்ப அட்டைகளுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நியாய விலைக் கடையில் தற்போது  அரிசி, பருப்பு, சர்க்கரை  மண்ணெண்ணெய்,  பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் பொது மக்களுக்கு குறைவாகவே விநியோகம் செய் யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், குடும்ப அட்டைக்கு மாதந்தோறும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுவ தில்லை. ஒரு மாதம் விட்டு ஒரு மாதம்  மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சனியன்று பொது மக்களுக்கு வழங்கப்பட்ட 60 லிட்டர் மண் ணெண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட 60  லிட்டருக்கு பதில் 50 லிட்டர் மண்ணெண் ணெய் உள்ளதால் பொதுமக்களுக்கு விநி யோகம் செய்யப்படவில்லை. இதுபோல் அனைத்து பொருட்களுமே குறைவாக உள்ளது.  மேலும் விற்பனையாளர்கள், ரேசன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்க கூடும் என பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், பொதுமக்கள் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள்    விரைந்து வந்து குடும்ப அட்டைதாரர் களுக்கு உரிய பொருட்கள் வழங்கப்படு மென உறுதியளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ஓபிஎஸ் அணி ஏற்றிய கொடியை இறக்கிய இபிஎஸ் அணியினர்

மேட்டுப்பாளையம், செப்.24- ஓபிஎஸ் அணியினர் ஏற்றிய அதிமுக கொடியை இபிஎஸ் அணியினர் இறக்கி கழட்டி எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஓபிஎஸ் அணியின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் சுப்ரீம் இளங்கோ தலைமையில், அண்ணா படத்திற்கு மரியாதை செய்து, கொடி கம்பத்தில் அதிமுக கொடியினை ஏற்றினார். இதனையறிந்த இபிஎஸ் ஆதரவாளர்களான அதிமுக-வின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார், கோவை மாவட்ட அம்மா பேரவை செய லாளர் நாசர் உள்ளிட்ட அதிமுகவினர் கொடி யேற்றி விட்டு நின்று கொண்டிருந்த  ஓபிஎஸ்  அணியினரிடம், நீங்கள் அதிமுக கொடியை  ஏற்ற எந்த உரிமையுமில்லை எனக்கூறி  வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஏற்றப்பட் டிருந்த கொடியினை இறக்கினர்.  இதனையறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறை அதிகாரிகள், இரு தரப்பை யும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால்,  ஓபிஎஸ் தரப்பினர் அண்ணாவின் படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது  குறித்து எங்களுக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், சட்டத்திற்கு விரோதமாக அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழ கத்தின் கொடியை ஏற்றுவதையோ அதனை பயன்படுத்துவதையோ அனுமதிக்க இயலாது என காவல்துறையினரிடம் தெரி வித்த அதிமுகவினர், ஓபிஎஸ் தரப்பினர் ஏற்றிய கொடியை இறக்கியதோடு அதனை  எடுத்தும் சென்று விட்டனர். இதனால்,  இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரியில் போக்சோ நீதிமன்றம் திறப்பு

தருமபுரி, செப்.24- தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆ.மணிமொழி திறந்து வைத்தார். போக்சோ சட்டம் தொடர்பான வழக்குகள், பாலியல் துன்பு றுத்துதல் தொடர்பான வழக்குகள், மகிளா நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்தன. அதிகளவு வழக்குகள் உள்ள போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன் றத்தை அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்பெயரில் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து அரசு முடிக்க தடங்கத்திலுள்ள தருமபுரி மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் துவங்கப் பட்டு, நீதிபதியாக சையத் பாகத்துல்லா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற விழாவை, சிறப்பு  நீதிமன்றத்தினை மாவட்ட முதன்மை நீதிபதி ஆ.மணி மொழி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, காவல் கண் காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், குடும்ப நல நீதிபதி, தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், தருமபுரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன், செயலாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி

ஈரோடு, செப்.24- கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்று வரும் வீட்டு உப யோகப் பொருட்களுக்கான  கண்காட்சி திங்களன்று (இன்று)  நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் வீட்டு உப யோகப்பொருட்கள் கண்காட்சி தனியார் திருமண மண்டபத் தில் நடைபெற்று வருகிறது. 100 அரங்குகள் அமைக்கப்பட் டுள்ள இக்கண்காட்சி நிர்வாகிகள் கூறுகையில், எலக்ட்ரா னிக்ஸ் பொருட்கள், வீடுகள், அலுவலகங்களுக்கான பர்னிச் சர்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், உணவுப்பொருட்கள், பெண்களை கவரும் ஆடைகள், வீடுகளை சுத்தம் செய்யும் பொருட்கள், உடற்பயிற்சி மற்றும் உடல் மசாஜ் பொருட்கள் குவிக்கப்பட்டு உள்ளன. செல்லப்பிராணிகள், வண்ண மீன்க ளுக்கு என்று தனியாக அரங்கு அமைக்கப்பட்டு உள்ளன. குழந்தைகள் குதூகலித்து விளையாட பல்வேறு விளை யாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் வண்ண மீன்கள் இலவச மாக வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சிக்கு வரும் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படு கிறது. மேலும், இந்த கண்காட்சியில் கேரள பர்னிச்சர்கள் அனைத்தும் விலையில் இருந்து 70 சதவிகிதம் தள்ளுபடி யில் வழங்கப்படுகிறது. கண்காட்சி அரங்கின் முகப்பில் 30  அடி உயர செயற்கை டைனோசர் அனைவரையும் உற்சாக மாக வரவேற்கிறது. இந்த கண்காட்சி திங்களன்று (இன்று)  இரவு 9 மணியுடன் நிறைவடைய உள்ளது, என்றனர்.

முறைகேடாக பத்திரப்பதிவு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சேலம், செப்.24- மகுடஞ்சாவடி சார்பதிவாளர் அலு வலகத்தில் இடைத்தரகர்களை உள்ளே  அனுமதித்து, முறைகேடாக பத்திரப் பதிவு செய்து வரும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக் கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடியில் பத்திரப்பதிவு அலு வலகம் செயல்பட்டு வருகிறது. இந்த  அலுவலகத்தில் மகுடஞ்சாவடி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள்  நிலம், வீடு, கடைகள், திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பத்திரப்பதிவு களை செய்து வருகின்றனர். நாள் ஒன் றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட பதிவு களும், விசேஷ நாட்களில் 100க்கும்  மேற்பட்ட பத்திரப்பதிவு நடைபெற்று வருகின்றன. இதனிடையே அலுவல கத்தில் இடைத்தரகர்கள் மற்றும் போலி பத்திர எழுத்தாளர்கள் ஆதிக்கம் அதிக ளவில் உள்ளதாகவும், ஒரு சில நிலங் கள் முறையான ஆவணங்கள் இல்லா மல் போலி பத்திரங்கள் தயாரித்து, கிரை யம் செய்வதாகவும் புகார் எழுந்துள் ளன.  செப்.20 ஆம் தேதியன்று முதல்  பாலச்சந்திரன் என்பவர் பொறுப்பு சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் இடைத்தரகர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, முறைகேடாக பத் திரங்களை பதிவு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் மகு டஞ்சாவடியில் பொறுப்பு சார்பதிவாள ராக பொறுப்பேற்ற தினத்திலிருந்து தற் போது வரை முறைகேடாக 100க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு நடைபெற்றுள் ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக் கள் கூறுகையில், தமிழக அரசு அறி வித்த ஆணைப்படி, இடைத்தரகர்கள் உள்ளே நுழையாதவாறு இருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். முறைகே டான பதிவுகளை ஆய்வு செய்து உரிய  நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண் டும் என வலியுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மண்ணை கவ்வும்

வேல்முருகன் பேட்டி

வேல்முருகன் பேட்டி சேலம், செப்.24- காவிரி நீர் விவகாரத்தில் ஒன்றிய அரசு விரைந்து தீர்வு காணவில்லையெனில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மண்ணை கவ்வும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சேலத்தில் செய்தி யாளர்களிடம் கூறுகையில், காவிரி நீர் விவ காரத்தில் ஒன்றிய அரசு இரட்டை வேடம்  போடுகிறது. கர்நாடக நடிகர்கள் தமிழ்நாட் டிற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என தெரி வித்து வருவது கண்டனத்திற்குரியது. துணை ராணுவத்தை கர்நாடகத்திற்கு அனுப்பி அங் குள்ள அணைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தமிழ்நாட்டிற்கு தேவை யான தண்ணீரை ஒன்றிய அரசு பெற்று தர வேண்டும். இல்லையெனில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி யில் பாஜக கூட்டணி மண்ணை கவ்வும். மேலும், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தி, கல்வி மற்றும் வேலை வாய்ப் பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சனா தனத்திற்கு எதிராக பேசும் திமுக அரசு, தமிழ்நாட்டில் சனாதனத்தை தூக்கிப் பிடிக் கும் நபர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தருவது வேதனையாக உள்ளது,  என்றார்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, செப்.24- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களிலி ருந்து விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு சனி யன்று 3,928 கிலோ பட்டுக் கூடுகள் கொண்டு வரப்பட் டன. இதில் ஒரு கிலோ பட் டுக்கூடு அதிகபட்சமாக ரூ.585க்கும், குறைந்தபட்ச மாக ரூ.324க்கும், சராசரி யாக ரூ.471.30க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.18 லட்சத்து 51 ஆயிரத்து 346க்கு விற்பனை செய்யப்பட்டன.