உடுமலை, டிச.1- தியாகி வெள்ளியம்பாளையம் ஈஸ்வரனின் 40 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவி டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் அஞ்சலி செலுத்தினர். உடுமலையை அடுத்த வெள்ளி யம்பாளையம் கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு உள்ளூர் நிலவுடையமை யாளர்கள் நடத்திய தாக்குதலில் வாலிபர் மற்றும் விவசாயிகள் சங்க தலைவரான ஈஸ்வரன் கொல்லப்பட் டார். இவரின் 40 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதனன்று அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் ரங்க நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் ஒன்றிய செய லாளர்கள் சசிகலா, கனகராஜ், வடி வேல் மற்றும் சிஐடியு செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.